ஹேக்கர் ஹம்சா பெண்டெலட்ஜ் தூக்கிலிடப்பட்டாரா ?

பரவிய செய்தி

ஹம்சா பெண்டெலட்ஜ் என்ற ஹேக்கர் அமெரிக்காவின் வங்கிகளை ஹேக்கிங் செய்து பல மில்லியன் டாலர்களை திருடி பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு உதவி உள்ளார் . இதனால் அவருக்கு மரணதண்டனை அறிவித்து தூக்கிலிடும் முன் சிரித்த முகத்துடன் விடை பெற்றார் .

மதிப்பீடு

சுருக்கம்

ஈரானின் நீதிபதியை கொன்றதற்காக மஜீத் என்பவர் தூக்கிலிடப்பட்ட படம் தான் இது . ஹேக்கர் ஹம்சா பெண்டெலட்ஜ் சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை  அனுபவித்து வருகிறார் .

விளக்கம்

  ஆகஸ்ட் 2 , 2007 ஆண்டில் ஈரானின் முக்கிய நீதிபதியை கொன்றதற்காக டெக்ரான் பகுதியின் சதுக்கத்தில் இருவர் தூக்கிலிடப்பட்டனர் . ஈரானின் தலைநகரில் , 2002 முதல் நடைமுறையில் உள்ள மக்களின் முன் தூக்கிலிடப்படும் பொது மரணதண்டனை வழங்கப்பட்டது . மத்திய டெக்ரானில் நீதிபதி ஹாசன் மொக்தாடாஸ் படுகொலை செய்த மஜீத் மற்றும் அவரது மருமகனான ஹொசைன் காவோசியர் ஆகியோருக்கு மக்களின் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்பொழுது பலர் கடவுள் இருக்கிறார் என்று கூறினர் , பலர் மொபைல் போன்களில் படம் பிடித்தனர் , சிலர் சிரித்தனர் . மஜீத் இறப்பதற்கு முன் தன் மருமகனை பார்த்து சிரித்துள்ளார் .

Advertisement

இந்த மரணதண்டனைக்கு மனித உரிமை ஆணையம் ஈரானை விமர்சித்து உள்ளனர் . மேலும் சீனாவை விட ஈரானில் அதிகப்படியான மரணதண்டனைகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளனர் . பொது மேடையில் தூக்கிலிடப்படும் முன் மஜீத் சிரித்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவின . ஆனால் வேறு சில கதைகளோடு இன்றளவும் வைரலாகி வருகிறது .

அல்ஜிரியவை சேர்ந்த ஹம்சா பெண்டெலட்ஜ் என்ற ஹேக்கர் அமெரிக்காவின் பல வங்கிகளை ஹேக்கிங் செய்து 400 மில்லியன்டாலர்களை திருடி பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு உதவியுள்ளார் . ட்ரோஜன் ஹார்சில் இருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி spyeye என்ற மென்பொருளை உருவாக்கி உள்ளனர் . இதை பயன்படுத்தி அமெரிக்காவின் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பல மில்லியன் டாலர்கள் திருடியுள்ளார் . இவர் 2013 ல் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார் .

அல்ஜீரியாவில் உள்ள tizi ouzou சிறையில் 15 ஆண்டுகள் தண்டனை  அனுபவித்து வருகிறார் . இதையறியாமல் பலர் மஜீத் சிரிப்புடன் இருந்த படத்தை ஹம்சா பெண்டெலட்ஜ் என்று தவறாக புரிந்து கொண்டு பல வதந்திகளை பரப்பி வருகின்றனர் . சிலர் இதை அறியாமல் உண்மை என்று நினைத்து இந்த படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Advertisement
Please complete the required fields.




ஆதாரம்

Back to top button