This article is from Dec 19, 2017

அரசு மருத்துவமனையின் திசைப் பலகையில் தமிழ் இல்லையா?

பரவிய செய்தி

வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் திசைப் பலகையில் தமிழ் மொழி இல்லை. திசைப் பலகையில் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மதிப்பீடு

விளக்கம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அதிகளவில் தோல் ஏற்றுமதி செய்யும் நகரங்களில் ஒன்று. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அமைத்திற்கும் பகுதிகளை அறிந்துக் கொள்ள ஏதுவாக திசைப் பலகை வைக்கப்பட்டிற்கும். அதில், தமிழ் மொழியை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் மட்டுமே பெயர்கள் எழுதப்பட்டிருப்பதாகக் கூறி முகநூலில் சில பக்கங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

   இவ்வாறு பரவியச் செய்தி உண்மையில்லை என்று நிரூபிக்கும் வகையில், களத்திற்கே சென்று நமது you turnநண்பர் ஒருவர் எடுத்த வீடியோ பதிவை ஆதாரமாக பதிவு செய்துள்ளோம்.

ஆதாரமாக பதிவிட்ட வீடியோ பதிவில், திசைப் பலகையின் பின்புறத்தில் சிகிச்சைப் பிரிவு போன்ற பகுதிகளின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் ஒரே வரியாக எழுதப்பட்டிருக்கும். அந்த பலகையின் முன்புறத்திற்கு சென்று பார்த்தால், ஆண்கள் பிரிவு, பிணவறை, தேநீர் நிலையம், தலைமை மருத்துவ அலுவலர் அறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு என்று தூய்மையான தமிழிலே இடம்பெற்றிக்கும்.

இதை அறியாமல் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் மற்றும் உருதுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறி மொழி சண்டையை தூண்டும் விதத்தில் சமூக வலைதளத்தில் மீம்ஸ் போன்ற பதிவுகளை வெளியிட்டனர். உருது மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பதிவிடுகின்றனர். எனினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழை நீக்கி இந்தியை திணிக்கும்போது வராத கோபம், மூன்றாம் மொழியாக உருது இடம்பெற்றிருப்பதற்கு மட்டும் ஏன் இத்தகைய கோபங்கள்!.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader