This article is from Nov 16, 2017

ஆகஸ்ட் 21 சூரிய கிரகணத்தால் பூமி இருளில் மூழ்கப்போகிறதா ?

பரவிய செய்தி

21 ஆகஸ்ட் 2௦17 அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தால் பூமியானது நான்கு மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கும். மேலும் வானில் நான்கு கோள்களை நம்மால் பார்க்க இயலும்.

மதிப்பீடு

சுருக்கம்

நிலவானது சூரியனை 3 நிமிடங்கள் மட்டுமே முழுவதுமாக மறைத்திருக்கும் .

விளக்கம்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நீள்வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும் நிகழ்விற்கு சூரிய கிரகணம் என்று பெயர். இதனால் சூரியனின் ஒரு பகுதியோ அல்லது முழு பகுதியோ நிலவினால் மறைக்கப்படும். கிரகணத்தின் போது நிலவானது சூரியனை 3 நிமிடங்கள் வரை முழுவதுமாக மறைத்திருக்கும். கிரகணத்தில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கலப்பு கிரகணம், கங்கன கிரகணம் என்று பல வகைகள் உண்டு. இந்நிலையில் ஆகஸ்ட் 21 தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணமானது 99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றும் அபூர்வ சூரிய  கிரகணம் ஆகும்.

இந்த சூரிய கிரகணத்தை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆப்ரிக்காவில் உள்ள மக்களால் பார்க்க இயலும் என்று நாசா அறிவித்துள்ளது. ஒரேகான் கடற்கரையில் தொடங்கும் கிரகணத்தின்  பாதையானது வட அமெரிக்காவின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்று  கொலம்பியாவில் முழுவதுமாக நீங்கும். அதன் பிறகு நிலவின் நிழலானது  அமெரிக்கப் பகுதியை விட்டு நீங்கி விடும். இந்த கிரகணமானது 2 நிமிடங்கள் 40 வினாடிகள் வரை நீடிக்கும் என்று கூறியுள்ளனர்.

சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க கூடாது, அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும் . மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் கிரகணத்தை கண்ணாடிகள் அணிந்து கூட பார்ப்பதும் பாதுகாப்பற்றது . இதனால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று நாசா மையம் மக்களுக்கு சில அறிவுரைகளை  வழங்கியுள்ளது .

99 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தோன்றும் அபூர்வ சூரிய கிரகணம்  முழுவதுமாக அமெரிக்கப் பகுதிகளில் நிகழ்வதால் இந்தியாவில் காண வாய்ப்புகள் இல்லை.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader