This article is from Dec 01, 2017

ஆதியோகியின் 112 அடி உயரச்சிலை கின்னஸ் சாதனை.

பரவிய செய்தி

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்ட ஆதியோகியின் 112 அடி உயர திருமுகச்சிலை , உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

ஈஷா யோகா அறக்கட்டளை இதன் மூலம் இரண்டு முறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது .

விளக்கம்

 தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம் . ஈஷா அறக்கட்டளையின் சார்பில் 24 பிப்ரவரி 2017ல் ஆதியோகியின் 112 அடி உயரத்  திருமுகச்சிலை நிறுவப்பட்டது . இச்சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார் . ஆதியோகியின் 112 அடி உயர  திருமுகச்சிலையானது உலகிலேயே மிகப்பெரிய மார்பளவு சிலை என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது .

 கின்னஸ் சாதனை படைத்த ஆதியோகியின் 112 அடி உயர மார்பளவு சிலையின் உயரம் 34.24 (112 அடி) , அகலம் 24.99(81 அடி) , நீளம் 44.9 (147 அடி) ஆகும் . கின்னஸ் புத்தகத்தில் , ஈஷா அறக்கட்டளை உலகின் மிகப்பெரிய மார்பளவு சிலையை 11 மார்ச் 2017ல் உருவாக்கியதாகக் உறுதி செய்கிறோம் என்று குறுப்பிட்டுள்ளனர்  . இதன் மூலம் ஈஷா அறக்கட்டளை இரண்டாவது கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது .

 27 அக்டோபர் 2006 ஆண்டில் ஈஷா அறக்கட்டளையால் 8,52,587  மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது . உலகின் முதல் யோகியான ஆதியோகி , மனிதனின் தன்னிலை மாற்றத்துக்கென 112 வழிமுறைகளை கூறியதாகவும் , அதன் குறியீடே 112 அடி உயர சிலை என்று ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார் .

 மேலும் இந்தியாவில் 3 பகுதிகளில் ஆதியோகியின் திருமுகச்சிலை நிறுவ இருப்பதாக கூறியுள்ளார் . ஆதியோகியின் மார்பளவு சிலையை திருந்து வைக்க பிரதமர் அவர்கள் வந்த போது எதிர்ப்புகள் பல வந்தன . வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் இருந்த காடுகளை அழித்து இச்சிலை நிறுவியதாக மக்கள் பலர் கூறி வந்தனர் . மேலும் அனுமதி வாங்கப்படாமல் கட்டிடங்கள் கட்டியதாக ஈஷா யோகா மையத்தின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader