This article is from Nov 16, 2017

ஆந்திராவில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடிப்பு.

பரவிய செய்தி

ஆந்திராவில் உள்ள கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய்களில் ஏற்பட்ட தீவிபத்தால் 15 பேர் இறந்துள்ளனர் . மேலும் 1௦ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டதால் 15 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் , 1௦ க்கும் மேற்பட்டோர் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டனர் ..

விளக்கம்

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான கெயில் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு எடுக்கும் வயல்கள் உள்ளன . கெயில் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு செயலாக்க மற்றும் விநியோக நிறுவனங்களில் ஒன்று ஆகும் . இந்நிலையில் 27 ஜூலை 2௦14 ஆண்டு அதிகாலை 5.3௦ மணிக்கு நகரத்தின் சுற்றுவட்டாரத்தில் பதிக்கப்பட்டு இருந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதால் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் தீ பற்றி எரிந்தது . இந்த விபத்தால் குண்டுகள் வெடித்தது போன்ற பெரிய பள்ளங்களும் , குழிகளும் ஏற்பட்டுள்ளன .

இவ்வாறு திடிரென ஏற்பட்ட விபத்தால் 15 பேர் இறந்து உள்ளனர் , மேலும் 10 க்கும் அதிகமானோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் . விபத்து எற்பட்ட பகுதியில் உள்ள வீடு மற்றும் தென்னந்தோப்புகளும் எரிந்து நாசமாகின .

 இது பற்றி நிறுவனத்தின் பி.சி திரிபாதி கூறுகையில் , விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் , நிவாரணம் நடவடிக்கை நடப்பதாக  கூறியுள்ளார் . இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார் . இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு எண்ணெய் அமைச்சகத்திற்கும் , நிறுவனத்தின் தலைவருக்கும் உத்தரவு பிறப்பித்தார் . விசாரணைக்கு பிறகு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் . இந்த விபத்து நடந்து சில ஆண்டுகள் ஆனாலும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இன்றளவும் அச்சத்தில் உள்ளனர் .

பலநாட்களாக வாயுக்கசிவு உள்ளது என மக்கள் புகார்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர் . நாடு முழுவதும் இது போன்ற எரிவாயு எடுக்கும் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன .

வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கை தரம் மாற்றத்தை பொறுத்தே இருக்க வேண்டுமே தவிர உயிர்களுடன் விளையாட கூடியதாக இருக்கக் கூடாது . இதை போன்ற விபத்துகள் வேறெங்கும் நடக்க வாய்ப்பில்லை என்று எந்த எரிவாயு நிறுவனத்தாலும் உறுதி அளிக்க இயலாது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader