This article is from Nov 30, 2017

இந்தியாவில் உள்ள போலி சாமியார்களின் பெயர்கள் அறிவிப்பு.

பரவிய செய்தி

இந்தியாவில் உள்ள போலி சாமியார்களின் பட்டியலை சாதுக்களின் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் வெளியிட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

சாமியார்கள் என்ற பெயரில் சிலர் சமூக கொடுஞ்செயல்களை செய்துவருவதால், நாட்டில் உள்ள போலி சாமியார்களின் பட்டியலை சாதுக்களின் அமைப்பு வெளியிட்டுள்ளது.

விளக்கம்

 பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள போலி சாமியார்களின் பட்டியலை வெளியிடுவதாக சாதுக்களின் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் ஆன்மீகத்தை போதிப்பதாகக் கூறி பல மடங்களும், அமைப்புகளும் உள்ளன. அதில் பலர் பிரபலமாகவும் இருந்து வருகின்றனர். பல கோடி மக்களுக்கு ஆன்மீகத்தை போதிக்கக் கூடிய சாமியார்களே பாலியல் வன்கொடுமை, கொலை என்று பல கொடுஞ்செயல்கள் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களின் மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. எனவே ஆன்மீகம் என்ற பெயரில் வலம்வரும் 14  போலி சாமியார்களின் பட்டியலை சாதுக்களின் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத்வெளியிட்டுள்ளது.

 சாதுக்கள்

   உத்திரப்பிரதேசம் அலகாபாத்தில் அகாராக்களின் தலைமை அமைப்பின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரியின் தலைமையில் 13 அகாராக்களின் 26 சாதுக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாதுக்களின் சபையினர் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்தனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மஹந்த் நரேந்திர கிரி கூறுகையில், நாட்டில் பல மாநிலங்களில் மிகவும் பிரபலமான சாதுக்களின் மீது பாலியல், கொலை எனப் பல வழக்குகள் உள்ளன. எனவே நாட்டில் உள்ள போலி சாமியார்களை பற்றி மக்கள் அறிந்துக் கொள்ள 14 போலி சாமியார்கள் கொண்ட பட்டியலை வெளியிடுவதாகவும், இவர்களின் மீது மக்கள் யாரும் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

KUMBAMELA NASIK

   பட்டியலில் இடம்பெற்ற சாமியார்களின் விவரங்கள், பாலியல் வழக்கியில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்ற குர்மித் ராம் ரஹீம், பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு, மத்திய பிரதேசத்தின் அசுமல் சிருமாளனி அவரது மகன் நாராயணன் பெயருல், மும்பையின் சாய் ராதே மா, நொய்டாவின் பில்டர் பாபா, மகாராஷ்டிராவின் சுவாமி அசீமானந்தா மற்றும் இச்சாதாரி பீமானந், உபியின் பிரஹஷ்பதி கிரி, ஹரியானாவின் ராம்பால், ஜார்கண்டின் நிர்மல் பாபா, டெல்லியின் சுவாமி ஓம்ஜி மற்றும் ஆச்சார்யா குஷ்முனி ஆகியோர் ஆவர்.

  இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு கும்பமேளா, மகாகும்பமேளா மற்றும் ஆன்மீகக் கூட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கக்கூடாது என்றும், மற்ற சாதுக்களும் இவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சாதுக்களின் சபை அறிவித்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader