This article is from Nov 16, 2017

இந்தியாவை விட அரேபியாவில் தக்காளியின் விலை குறைவா ?

பரவிய செய்தி

பாலைவனப் பகுதியான சவூதி அரேபியாவில் கூட ஒரு கிலோ தக்காளியின் விலை 18 ரூபாய் தான் . ஆனால் நம் நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய் .

மதிப்பீடு

சுருக்கம்

பாலைவனப் பகுதியான சவூதி அரேபியாவில் கூட ஒரு கிலோ தக்காளியின் விலை 18 ரூபாய் தான் . ஆனால் நம் நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய் .

விளக்கம்

  தக்காளி இந்தியாவில் அதிக விலையில் விற்கப்பட காரணம் பருவமழை பொய்த்து போனது , விவசாயிகளால் விவசாயம் செய்ய இயலாமை , வறட்சி என்று கூறிக்கொண்டே போகலாம் . ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய் விற்ற இதே நாட்டில் தான் ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய்க்கும்  விற்றுள்ளது . தேவைக்கு அதிகமாக இருந்தால் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகளுக்கே பிரச்சனையாக அமைந்து விடுகின்றது .

ஜூலை 2017 இல் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய் என்ற அதிகபட்ச விலையை எட்டியது . அன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் சவூதி அரேபியாவில் தக்காளியின் விலை 18 ரூபாய் தான் என்றும் , நம் நாட்டில் அதிகமாக உள்ளது என்று செய்திகளை பரவி காணப்பட்டன .

  ஆனால் அது உண்மையல்லவே , அரேபியாவில் ஒரு கிலோ தக்காளியின் விலை 3 முதல் 5 ரியால்கள் . அதாவது இந்திய மதிப்பில் 54 முதல் 90 ரூபாய் வரை விற்றது . அங்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 64 ரூபாயா உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது .

பாலைவனப்பகுதியில் விவசாயம் செய்கின்றார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய செயல் தான் . எனினும், தக்காளியின் விலை 120 ரூபாய் விற்கும் போது வந்த கோபம் 2 ரூபாய்க்கு விற்கும் போது ஏன் வரவில்லை . விலையின் விழ்ச்சியால் பாதிக்கப்படப்போவது விவசாயிகள் தானே .

 தக்காளி அதிக விலைக்கு விற்கும் போது அதற்கு இராணூவ பாதுகாப்பு கொடுத்த அரசாங்கம் அதன் விலையை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது . விலையின் விழ்ச்சியால் விவசாயிகள் பயிறுடுவதை தவிர்த்ததால் விலை அதிகரிப்பு ஏற்பட்டது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader