This article is from Jan 06, 2018

இனி ரெயில்களில் ஜன்னலோர இருக்கைகளுக்கு அதிக கட்டணமா ?

பரவிய செய்தி

இனி இந்திய ரெயில்களில் உள்ள ஜன்னலோர இருக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ரெயிலில் செல்போன்களுக்கு சார்ஜ் போடுவதற்கு 15 ரூபாய், கழிப்பறை உபயோகிப்பதற்கு 5 ரூபாய், ரெயில்களில் உணவு உண்பதற்கு 10 ரூபாய், மின் விசிறி மற்றும் மின் விளக்கு போன்றவற்றிக்கு மின்சாரக் கட்டணமாக 20 ரூபாய் என்று தனித்தனியாக வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

நீண்டதூர விரைவு ரெயிகளில் உள்ள கீழ் படுக்கைகள் மற்றும் ஜன்னலோரப் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் என்று வெளியான தகவல்களுக்கு இந்திய ரெயில்வே துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

விளக்கம்

இந்திய ரெயில்வே துறையில் ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும், வருவாயை அதிகரிக்கவும் மத்திய ரெயில்வே அமைச்சகம் பயணக் கட்டணங்களை உயர்த்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில், ஒன்று தான் கடந்த ஆண்டில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இயக்கப்பட்ட கவிதா விரைவு ரெயில்கள்.

மேலும், பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கும் முறையையும் கொண்டு வந்தனர். குறிப்பாக, விடுமுறை தினங்களில் மக்கள் அதிகளவில் தங்கள் ஊர்களுக்கு செல்வதால் ரெயில் கட்டணங்களை அதற்கு ஏற்றவாறு உயர்த்துவது தொடர்பான திட்டமும் நடைமுறையில் உள்ளது. பயணிகளின் வருகைக்கேற்ப ஒவ்வொரு 10 சதவீத பயணச்சீட்டுக்கும், அடுத்தடுத்த 10 சதவீத கட்டண உயர்வுடன் அதிகமாக வசூலிக்கப்படும்.

சென்ற ஆண்டு அறிமுகம் செய்த கவிதா விரைவு ரெயிகளில், முதல் வகுப்பு பயணக் கட்டணமானது சில சமயங்களில் விமானக் கட்டணங்களை விட அதிகமாக இருப்பதாக மக்கள் புகார்களை தெரிவித்தனர். இருப்பினும், அதை ஒழுங்குப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், விரைவு ரெயில்களின் கட்டணத்தை அதிகரிக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறதும். மேலும், ரெயில்களில் கீழ் படுக்கைகள் மற்றும் ஜன்னலோரப் படுக்கைகளுக்கு அதிகளவில் போட்டிகள் நிலவுவதால், அவற்றிக்கு அதிகக் கட்டணம் வசூலிக்க தீர்மானித்துள்ளனர். அதன்படி பயணிகள் கீழ் படுக்கைகள், ஜன்னலோரப் படுக்கைகளுக்கு கூடுதல் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், “ கூடுதல் கட்டணம் குறித்த செய்திகள் தவறானவை என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரெயில்வே துறையின் செய்தித் தொடர்ப்பாளர் அனில் சக்சேனா அளித்த தகவலில், ரெயில்களில் கீழ் மற்றும் ஜன்னலோரப் படுக்கைகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் என்று வெளியாகிய செய்திகள் தவறானது மற்றும் அது முற்றிலும் வதந்தி என்றும் கூறியுள்ளார் ”.

கீழ் மற்றும் ஜன்னலோரப் படுக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று தவறான செய்திகள் வெளியானதை அடுத்து, ரெயிகளில் மின் விளக்குகள், மின் விசிறி, உணவு உண்பதற்கு, செல்போன்கள் சார்ஜ் செய்வது மட்டுமின்றி கழிவறையைப் பயன்படுத்துவதற்கு கூட தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader