This article is from Nov 11, 2017

இரயில்வே உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றதில்லை.

பரவிய செய்தி

இந்திய ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல .

மதிப்பீடு

விளக்கம்

  இந்திய பாராளுமன்றத்தில் இந்திய தலைமை தணிக்கைக்குழு தலைவர் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார் . அதில் இந்திய ரயில்வேயில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்பதற்கு ஏற்றது அல்ல , அசுத்தமானது , மறுசுழற்சி செய்யப்பட்டது , கெட்டுப்போன  உணவுகளை கொடுப்பதாகவும் , அனுமதி இல்லாத தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் கூறியுள்ளனர் .

உணவு தயாரிக்கும் பணிகளை செய்பவர்கள் ரயில்வே கொள்கைகளை கடைப்பிடிக்காமல் தவறாக நடந்து கொள்கின்றனர் . மேலும் இந்த ஆய்வில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை இவர்கள் மேற்கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர் . அவர்கள் விற்பனை செய்யும் பொருள்களுக்கு ரசீது போன்றவை வழங்குவதும் இல்லை .

தணிக்கைக் குழுவும் , நிர்வாகமும் சேர்ந்து 74 ரயில்வே நிலையங்களிலும் , 80 ரயில்களிலும் மேற்கொண்ட ஆய்வில் முடிவில் ரயில்களிலும் , நிலையங்களிலும் உணவு தயாரிப்பில் சுத்தம் , சுகாதாரம் மேற்கொள்வதில்லை என்று கூறியுள்ளனர் .

மக்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தகமாக வருவது இல்லை , குப்பைத்தொட்டிகள் சரியாக சுத்தம் செய்வது இல்லை , உணவு பொருள்கள் நன்றாக மூடப்படுவதில்லை . இதனால் பூச்சிகள் , ஈக்கள் , எலிகள் போன்றவற்றால் நோய் தொற்று ஏற்படலாம் என்றெல்லாம் கூறினர் .

குஜராத் ரயில்களில் உணவு பட்டியலில் அல்லாத உணவுகளை வழங்குவதாகவும் , எண்ணிக்கைகள் குறைவாகவும் , அனுமதி இல்லாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன .

நம் தேசத்தில் எங்கும் ஊழல் உள்ளது என்பதற்கு இது போன்ற பல செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றோம் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader