This article is from Jan 08, 2018

இராணுவ வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை குறைத்தது மத்திய அரசு.

பரவிய செய்தி

போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை ரூ.10000 ஆக குறைத்துள்ளது மத்திய அரசு.

மதிப்பீடு

சுருக்கம்

கல்வி உதவித்தொகை குறைப்பதை எதிர்த்து எழுந்த கோரிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்வதாகக் கூறிய மத்திய அரசு, தற்போது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறியுள்ளனர்.

விளக்கம்

“ தியாகிகளின் குழந்தை ” என்ற பெயரில் தொடங்கபட்ட திட்டத்தின் மூலம் போரில் இறந்த, காணாமல் போன அல்லது பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு கல்விக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் நாடு உருவாக நிகழ்ந்த போருக்கு பிறகு இத்திட்டமானது வலுபெற்றது. போரில் பாதிக்கப்பட்ட வீரர்களின் குழந்தைகளுடைய படிப்பு மற்றும் விடுதி கட்டணம் போன்றவற்றிக்கு உதவித்தொகையானது அவர்கள் முதுநிலைப் பட்டம் பெறும் வரை வழங்கப்படும். அதன் பின் மேகதூத் மற்றும் பவான் ஆகிய இரு நடவடிக்கைகளில் இறந்த மற்றும் பாதிக்கபட்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்காக மட்டும் நீட்டிக்கப்பட்டது.

போரில் பாதிக்கப்படும் இந்திய வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை மாதம் ரூ.10000 ஆக குறைப்பதாக ஜூலை 1-ம் தேதி மத்திய அரசு ஆணையைப் பிறப்பித்தனர்.  உதவித்தொகை குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்தத் தலைவர் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் சுபாஷ் பாம்ரே ராஜ்ய சபாவில் அளித்த விளக்கத்தில், 2017-2018  ஆம் ஆண்டில் மொத்தம் 2,679 மாணவர்களில் 193 மாணவர்களுடைய கட்டணத்திற்காகவும், சேமிப்பிற்காகவும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட தோராயமாக ரூ.3.20 கோடி அதிகம் செலவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.18.95 லட்சம் வரை ஒரு மாணவனுக்கு செலவிடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

    இதற்கு முன்பாக இந்திய கடற்படை அட்மிரல் சுனில் லான்பா, “இராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நாட்டிற்காக தங்கள் வாழ்வை அர்பணிக்கின்றனர். நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவ வேண்டியது அரசின் கடமை. எனவே குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை குறைப்பது சரியல்ல. இதனால் 3,400 வீரர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று இந்திய பாதுக்காப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் வாயிலாக கூறியிருந்தார்”.

இதைக் குறித்து மத்திய பாதுக்காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ” இது ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்சனை, தியாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினை மதிக்கின்றேன். அவர்கள் இதனால் காயப்பட்டிருப்பார்கள் என்று தெரியும். ஆகையால், இந்த முடிவை கண்டிப்பாக மறுபரிசீலனை செய்வேன்” என்று கூறி இருந்தார்.

இதைக் குறித்து கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி “YOUTURN” பக்கத்தில் பதிவிட்டிருந்தோம்.

இராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை குறைத்ததை மாற்றக்கோரிய ஆயதப்படைகளின் மூத்த தலைவரின் வேண்டுகோளை அரசாங்கம் புறக்கணித்தது.

பல்வேறு கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பிறகு மறுபரிசீலனை செய்வதாகக் கூறிய பாதுகாப்பு அமைச்சகம், தற்போது கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறியுள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader