This article is from Nov 11, 2017

உத்திரப்பிரதேசத்தில் இலவச ஆம்புலன்ஸ்க்கு ஆதார் கட்டாயம்.

பரவிய செய்தி

உத்திரப்பிரதேசத்தில் இனி இலவச ஆம்புலன்ஸ் உதவி பெற ஆதார் கார்டு அவசியம் என்று அந்த மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது . ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்கவே இத்தகைய திட்டம் என்று கூறி உள்ளனர் .

மதிப்பீடு

சுருக்கம்

ஆமாம் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் கொடுத்துவிட்டால் பசு மாட்டிற்கு எப்படி தர இயலும்

விளக்கம்

சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அணைத்து இலவச ஆம்புலன்ஸ்கள் உதவி பெற ஆதார் கார்டு கட்டாயம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . இதனால் இந்தியா முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர் .

அனைத்திற்கும் ஆதார் அவசியம் என்று திட்டங்களை கொண்டு வருகின்றார்கள் மத்தியில் ஆள்பவர்கள் . ஆனால் உத்திரப்பிரதேச மாநில அரசாங்கம் இத்தகைய புரிதல் இல்லா திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . மற்ற விசயங்களுக்கு ஆதார் அவசியம் என்று கூறுவதை கூட ஏற்று கொள்ளலாம் .

ஆனால் இலவச ஆம்புலன்ஸ் உதவிக்கு ஆதாரை அவசியம் என்று கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது . ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுப்பதற்கும் இதற்கும் ஏந்த சம்பந்தமும் இல்லையே .

ஓட்டுனர்கள் செய்யும் முறைகேடுகளை தடுக்க வாகனத்தில் gps போன்ற கருவிகளை பொருத்தி கண்காணிக்கப்படலாமே . இதை போன்று செய்யாமல் ஆதாரை அவசியம் ஆக்குவதால் யார்க்கு என்ன பயன் . இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கிராமப்புறங்களை சார்ந்த மக்களே .

சாலையில் விபத்து ஏற்பட்டு உதவிக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால் அவர்களால் ஆதார் கார்டு காண்பிப்பது சத்தியமா .  இறந்த உடல்களை தோள்களில் சுமந்து செல்கின்ற அவல நிலையில் தான் நம் தேசம் உள்ளது .

பசுவிருக்கு இலவச ஆம்புலன்ஸ் அளித்தவர்களிடம் வேறென்ன எதிர் பார்க்க இயலும் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader