This article is from Nov 11, 2017

கடலை மிட்டாய்க்கு GST வரி 18 சதவிகிதமா ?

பரவிய செய்தி

எளியவர்களும் உண்ணக்கூடிய இனிப்பு பொருள் தான் கடலை மிட்டாய் அதற்கு GST வரி 18 சதவிகிதமா …

மதிப்பீடு

சுருக்கம்

கடலை மிட்டாய்க்கு 5 சதவிகிதம் வரி மட்டுமே விதித்துள்ளனர்..

விளக்கம்

 GST என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசாங்கம் புதிதாக இந்த ஆண்டில் அமல்படுத்தியது . இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே விதமான வரி கொள்கையை கடைப்பிடிக்க போவதாக கூறியுள்ளனர் . இதில் பலதரப்பட்ட பொருள்களுக்கு உண்டான வரிகளை தெரிவித்துள்ளன .

குறிப்பாக குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு 18 சதவிகிதம் வரியை விதித்துள்ளதாக என்ற செய்தி அதிகமாக பேசப்பட்டது . ஆனால் உண்மை இல்லை என்று மத்திய சேவை மற்றும் சுங்கவரி ஆணையர் சரவண குமார் தெரிவித்துள்ளார் .

கடலை மிட்டாய்க்கு 5 சதவிகிதம் வரி மட்டுமே விதித்துள்ளனர் . கடலை மிட்டாயை குடிசை தொழிலாக செய்பவர்களுக்கு இது பொருந்தும் .

இது தொடர்பான செய்திகள் செய்திதாள்களிலும் , ஊடகங்களிலும் வந்துள்ளது . சிலர் தவறாக புரிந்து கொண்டு பணக்காரர்கள் சாப்பிடும் பிட்சாவிற்கு 5% வரியை கொடுத்துவிட்டு ஏழைகள் உண்ணும் கடலை மிட்டாய்க்கு 18% வரியை விதித்துள்ளனர் என்று சமூக வலைதளங்களில் பகிர்ந்தன .

உணர்வு பூர்வமான செயல்களுக்கு கோபம் வருவது இயற்கையே தவறில்லை , ஆனால் உண்மை எது பொய் எது என்று அறிந்து கோபப்படுங்கள் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader