This article is from Dec 29, 2017

கிரிக்கெட் பயணத்தில் ஒரு முறை கூட “நோ பால்” வீசாத கபில்தேவ்.

பரவிய செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தனது கிரிக்கெட் பயணத்தில் ஒரு முறை கூட “ நோ பால் ” வீசியது இல்லை என்பது எத்தனை பெயருக்கு தெரியும்.

மதிப்பீடு

சுருக்கம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 20 “ நோ பால்ஸ் ” மற்றும் 3 வோயிடுகளை வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

ரியானா மாநிலத்தைச் சேர்ந்த ” கபில்தேவ் ராம்லால் நிக்கஞ் ” மிகச்சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் இந்திய அணியில் இடம் பிடித்த கபில்தேவ், படிப்படியாக முன்னேறி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கபில்தேவ் மிகச்சிறந்த “ ஆல் ரவுண்டர் ” ஆவார். மேலும், இவர் வலது கை பந்து வீச்சு திறனுடையவர்.

    1983-ம் ஆண்டில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தி கோப்பையை வென்று தந்தார். மிகச்சிறந்த வீரரான கபில்தேவிற்கு ஹரியானா புயல் என்ற பட்டப் பெயர் உள்ளது.

” 1978 முதல் 1994-ம் ஆண்டு வரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில்தேவ், 434 விக்கெட்டுகள் மற்றும் 5,248 ரன்களையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கபில்தேவின் சராசரி(Avg) 29.65 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கபில்தேவ் 20 “ நோ பால்ஸ் ” மற்றும் 3 வோயிடுகள் என 23 பந்துகளை தவறுதலாக வீசியுள்ளார். மேலும், ஒரு நாள் போட்டிகளில் 253 விக்கெட்களையும், 3,783 ரன்களையும் பெற்றுள்ளார் “.

இதிலிருந்து கபில்தேவ் ஓர் மிகச்சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை அறிய முடிகிறது. கபில்தேவ் தனது வாழ்நாளில் நோ பால்களே வீசியதில்லை என்று கூறியது தவறாக இருந்தாலும் அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.  டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்கள் அடிப்படையில் சிறந்த வீரர்களின் தர வரிசை,

பந்துவீச்சாளர்

நாடு

தொடக்கம்

முடிவு

ஆட்டங்கள்

விக்கெட்கள்

வோயிடுகள்

நோ பால்ஸ்

மொத்தம்

சராசரி

முரளிதரன்

ஸ்ரீல

1992

2010

133

800

2

388

390

22.73%

வார்னே

ஆஸி

1992

2007

145

708

23

163

186

25.42

கும்ப்ளே

இந்

1990

2008

132

619

10

270

280

29.65%

மெக்ராத்

ஆஸி

1993

2007

124

563

26

364

390

21.64%

வால்ஸ்

மே.இ

1984

2001

132

519

12

392

404

24.44%

கபில்தேவ்

இந்

1978

1994

131

434

3

20

23

29.65%

பொல்லாக்

தெ.ஆ

1995

2008

108

421

28

602

630

23.12%

 

    டெஸ்ட் போட்டிகளில் உலகளவில் அதிக நோ பால்கள் வீசியவர்கள் பட்டியில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் பொல்லாக் 602 நோ பால்களை வீசியுள்ளார் . இருப்பினும், சராசரின் அடிப்படையில் குறைந்த போட்டிகளில் அதிக நோ பால்கள் வீசியதில் இலங்கையின் மலிங்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader