This article is from Nov 16, 2017

கோயம்புத்தூரில் பறக்கும் ஆம்புலன்ஸ் சேவை.

பரவிய செய்தி

கோயம்புத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனை பறக்கும் ஆம்புலன்ஸ் வசதியை செய்து உள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

முதல் முறையாக மருத்துவமனையில் அவசர உதவிக்கு  ஹெலிகாப்ட்டர் வசதி செய்துள்ளனர் .

விளக்கம்

 கோயம்புத்தூரில் உள்ள கங்கா தனியார் மருத்துவமனையில் புதிதாக ஹெலிகாப்ட்டர் ஆம்புலன்ஸ் வசதி செய்துள்ளனர் . இந்த சேவை 2017 ஜூன் 25 முதல் தொடங்கி உள்ளது . இந்தியாவிலேயே முதல் முறையாக மருத்துவத்திற்காக பறக்கும் ஆம்புலன்ஸ்சேவையை கொண்டு வந்து உள்ளனர் .

1992 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இரட்டை இன்ஜின் கொண்ட  109c ரக ஹெலிகாப்ட்டர் அவரச மருத்துவ சேவைக்காக கங்கா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐ.ஏ.எப் விமான முதன்மை தளவாய் பிஎஸ் தானோ கூறியுள்ளார் .

இந்த ஹெலிகாப்ட்டரில் அவசர சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதி , இரண்டு படுக்கைகள் , நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிக்க பல்ஸ் மற்றும் பிரஷர் மானிட்டர் போன்ற பல அம்சங்கள் அடங்கி உள்ளன . இந்த வகை ஹெலிகாப்ட்டர்கள் அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் போது நோயாளிகளை எடுத்து செல்லவும் , இதயம் போன்ற உடல் உறுப்பு பாகங்களை வேறு இடத்தில் இருந்து எடுத்து வரவும் பயன்படப்போவதாக தெரிவித்துள்ளனர் . இந்த ஹெலிகாப்ட்டரின் தரை இறங்கும் தளம் கங்கா நர்சிங் காலேஜ் பகுதியில் உருவாக்கப்படும் என்று அதன் இயக்குனர் கூறியுள்ளார் .

டெல்லியை சேர்ந்த தனியார் விமான நிறுவனத்துடன் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஹெலிகாப்ட்டர் வாங்கப்பட்டுள்ளது . பறக்கும் ஆம்புலன்ஸ்க்கு ஒரு மணி நேர வாடகையாக ஒரு லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் இயக்குனர் கூறினார் .

அவசரகால உதவிகளுக்கு இது போன்ற பறக்கும் ஆம்புலன்ஸ் வசதி மிகவும் உதவியாக இருக்கும் . நம் தமிழகத்தில் இந்த வசதியை கொண்டு வந்ததற்கு கங்கா மருத்துவமனைக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader