This article is from Dec 22, 2017

சிங்கப்பூரில் GST மற்றும் மருத்துவ நிலவரம்.

பரவிய செய்தி

7% GST வாங்குகின்ற சிங்கப்பூர் அரசாங்கம் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் போது 28% GST வாங்குகின்ற இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் வழங்க முடியவில்லை. மெடிசனுக்கு 12% GST, ஆனால் சாராயத்துக்கு GST இல்லை என்று மெர்சல் படத்தில் வரும் வசனம்.

மதிப்பீடு

சுருக்கம்

சிங்கப்பூரில் 7% GST என்பது உண்மையானாலும் மருத்துவம் முழுவதுவமாக இலவசம் இல்லை. மெடிசனுக்கு 12% GST என்பதும், சாராயத்துக்கு GST இல்லை என்பதும் உண்மையே.

விளக்கம்

 பல தடைகளுக்கு பிறகு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் GST பற்றி தவறாகக் கூறியதாக தமிழக பாஜகவின் தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் படத்தில் GST பற்றி வரும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த பிரச்சனை தேசிய அளவில் Trend ஆனது.

மெர்சல் படத்தில் வரும் வசனத்தில் 7% GST வாங்குகின்ற சிங்கப்பூர் அரசாங்கம் மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் போது 28% GST வாங்குகின்ற இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் வழங்க முடியவில்லை. எதிர்ப்புகள் கிளம்பியதற்கு காரணமே குறிப்பாக இந்த வசனம் தான். பாஜக-வை சேர்ந்த சில தலைவர்கள் சிங்கப்பூரில் 40 வருடங்களாக GST வரி செயலில் உள்ளது என்று கூறினர்.

1994 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் GST அமல்படுத்தப்பட்டது. அப்போதைய GST வெறும் 3% மட்டுமே. சிங்கப்பூரில் தற்போதைய GST 7% ஆகும். ஆனால், மருத்துவம் முழுவதுமாக இலவசம் என்றுக் கூறிவிட முடியாது. சிங்கப்பூர் மக்களுக்கு என ஒரு மருத்துவக் காப்பீட்டு திட்டம் உள்ளது. ஏப்ரல் 1984 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசாங்கம் “ MEDISAVE “ என்ற மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தொடங்கினர்.

  

     சிங்கப்பூர் மக்களின் வருமானத்தில் சிறு பங்கு இத்திட்டத்தின் கணக்குகளில் சேமிக்கப்படும். திடீரென விபத்தோ அல்லது அறுவைச்சிகிச்சையோ அல்லது உடல்நலக்குறைவு போன்ற எந்தவொரு மருத்துவத்திற்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மருத்துவமனைகளில் ஏற்படும் அதிகப்படியான மருத்துவ செலவுகளைக் கூட இதன் மூலம் செலுத்தலாம். இதைத் தொடர்ந்து  Medishield life, Medi fund, Elder shield போன்ற பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் சிங்கப்பூரில் உள்ளன.

இந்தியாவில் அதிகப்படியான GST 28% ஆகும். இதில் மருத்துவப் பொருட்களுக்கு GST 12% விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மருந்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன.  மருந்துப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மக்களும் பெருமளவில் பாதிக்கபடுகின்றனர். ஆல்கஹாலுக்கு GST வரிகள் இல்லை என்றுக் கூறியிருப்பது உண்மையெனினும், மாநில அரசுகளின் வரியான வாட் வரி 50% வரை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் அளிக்கபட்டாலும், சிலப் பகுதிகளில் அரசு மருத்துவத்தின் தரம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த அச்சமே தனியார் மருத்துவமனைகளின் மூலதனம் ஆகும். ஆகையால், நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி மக்களை காக்க வேண்டும் என்பது அனைவரது கருத்தாகும்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader