This article is from Nov 16, 2017

தங்க சிவன் சிலையுடன் ஆயிரக்கணக்கான பாம்புகளா ?

பரவிய செய்தி

பீகாரில் 160 கிலோ எடையுள்ள தங்கத்தினால் ஆன சிவன் சிலை ஒன்று போலீஸாரால் கையகப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பாம்புகள் சிலையை சுற்றி இருந்தாலும் அவைகள் யாரையும் ஒன்றும் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

மதிப்பீடு

சுருக்கம்

சிவன் சிலை தங்கத்தினால் செய்யப்படவில்லை என்று திருடர்களுக்கு  தெரிந்த பிறகு ரெயில்வே பாலத்திற்கு கீழே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

விளக்கம்

பீகாரியில் ரத்னபுரி என்ற இடத்தில் வீடு கட்டுவதற்காக பூமி பூஜை செய்து  தோண்டிய போது 160 கிலோ எடையுள்ள தங்கத்தினாலான சிவன் சிலையொன்றும், அதை சுற்றி ஆயிரக்கணக்கான பாம்புகள் சிலையை பாதுகாத்து இருப்பதையும் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே அந்த இடத்தில் சிவனுக்கு கோவில் கட்ட அப்பகுதி மக்கள் தீர்மானித்துள்ளனர். இதை தொடர்ந்து அப்பாம்புகள் மக்களை ஒன்றும் செய்யவில்லை. பின்னர் அச்சிலையானது போலீஸாரால் கையகபடுத்தப்பட்டது என்ற செய்தி இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் அனைத்தும் வதந்திகள் என்று சிலர் கூறி வருகின்றன

குஜராத்தில் உள்ள பலராம் கோவிலில் இருந்து 30 கிலோ எடையுடைய  சிவன் சிலையானது கடத்தப்பட்டுள்ளது. அச்சிலையானது தங்கத்தினால் செய்யப்படவில்லை என்று கண்டறிந்த பிறகு, சிலை தேவையற்றது என்று எண்ணிய திருடர்கள் ரெயில்வே பாலத்திற்கு அருகே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இந்த சிலையானது ரத்னபுரி கிராமத்தின் ரெயில்வே பாலத்தின் அருகில் இருக்கிறது என்ற தகவல் அறிந்த வந்த போலீஸாரால் சிலை மீட்கப்பட்டு வாகனத்தில் ஏற்றும் பொழுது புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

இது பற்றிய செய்திகள் அனைத்தும் தெளிவாக ஊடகங்களில் வந்துள்ளன. இதை அறியாமல் சிலர் கண்டெடுக்கப்பட்ட சிவனின் சிலையுடன் ஓர் கதையை உருவாக்கி வதந்திகளை பரப்பியுள்ளனர். மேலும் சிலையானது தோண்டி எடுக்கவும் இல்லை, அதைச்சுற்றி பாம்புகளும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இச்செய்தி நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் மதிப்பு இல்லையென்றால் கடவுளின் சிலையைக் கூடத் தூக்கியெறிந்துவிட்டு செல்கின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader