This article is from Nov 11, 2017

தேங்காய்க்கு வாக்களித்தால் தாமரையில் லைட் எரிகிறது.

பரவிய செய்தி

தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரை சின்னத்தில் லைட் எரிகின்றது என்று ஆர்.டி.ஐ யில் அதிர்ச்சி .

மதிப்பீடு

சுருக்கம்

ஆம் , டிஜிட்டல்  இந்தியா என்றால் சும்மாவா !!!

விளக்கம்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் லோனார் என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது . அந்த வாக்குச்சாவடியில் தேங்காய் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க தாமரை சின்னத்தில் விளக்கு எரிந்துள்ளது .

தொடர்ந்து இதே போல் பலர் வாக்கு செலுத்தும் போதும் இவ்வாறு நிகழ்ந்ததை அடுத்து அங்கு போட்டியிட்ட வேட்பாளர் அருண் சார்ஸ் ஓட்டு இயந்திரத்தில் உள்ள தவறை ஆதாரத்துடன் புல்தான மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார் .

அதன்பின் மாவட்ட கலெக்டர் தேர்தல் ஆணையரிடம் தொடர்புகொண்டு  தேர்தலை நிறுத்தி உள்ளனர் . இயந்திரத்தில் எற்பட்ட கோளாறுக் காரணமாக அந்த வாக்குச்சாவடியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்படுவதாக அறிவித்து , ஓட்டு இயந்திரங்களை சீல் செய்தனர் . மற்ற வேட்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க ஐந்து நாட்களுக்கு பிறகு மறுதேர்தலை நடத்தினர் . இதுபோல் இனி நடக்காது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளனர் .

வாங்கு இயந்திரங்களை சோதனையில் மேற்கொண்டு ஓட்டு இயந்திரத்தில் தவறுகள் நடந்துள்ளது என்றும் ஜூன் மாதம் விசாரணை நடக்கும் என்றும் ஆர்.டி.ஐ யில் வெளிப்படுத்தியுள்ளனர் . இதுபற்றிய தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அறிந்து கொள்ளலாம் .

ஓட்டு சீட்டில் முறைகேடுகள் நடக்கின்றன என்று கூறி தானே நவீன முறையில் வாங்கு இயந்திரங்களை கொண்டு வந்தனர் . இப்பொழுது அதில் கூட முறைகேடுகளா . மக்களின் நம்பிக்கை என்னும் வாக்கை பெற தகுதி இல்லாதவர்கள் இதுபோல் செயலை செய்யலாம் .

அன்று வாக்கு பெட்டிகளை தூக்கினார்கள் இன்று நவீன முறையில் வாங்குகளை தூக்குகிறார்கள் .

Please complete the required fields.




ஆதாரம்

RTI

Back to top button
loader