This article is from Nov 27, 2017

நீச்சல் குளத்தில் கண்களில் எரிச்சல் ஏற்பட காரணம் சிறுநீரா.

பரவிய செய்தி

நீச்சல் குளங்களில் குளிக்கும்போது கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம் நாம் நினைப்பது போல் நீரில் கலந்துள்ள குளோரின் அல்ல, மனிதனின் சிறுநீர் கலப்பதால் அவ்வாறு ஏற்படுகின்றது.

மதிப்பீடு

சுருக்கம்

நீச்சல் குளங்களில் குளித்தப் பிறகு கண்கள் சிவப்பு நிறமாவதற்கு நீரில் கலக்கப்படும் குளோரின் காரணம் இல்லை எனவும், நீரில் சிறுநீர் அசுத்தங்கள் கலப்பதால் எரிச்சல் ஏற்படுகின்றன என்று நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

விளக்கம்

நெடுநேரம் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைகின்றன. அதற்கு காரணம், நீரில் கலந்துள்ள குளோரின் எனவும், சிலர் உடல் சூட்டினால் இவ்வாறு ஏற்படும் என்றும் கூறுவர். ஆனால், நாம் நினைப்பது போன்று கண்கள் சிவப்பு நிறமாகி எரிச்சலடைவதற்கு காரணம் நீரில் கலக்கும் மனிதனின் சிறுநீர் அசுத்தங்கள் என்று நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

நீரில் கலக்கும் மனிதனின் சிறுநீர் மற்றும் வியர்வை அசுத்தங்கள் குளோரினுடன் கலந்து ரசாயனக் கலவையை உருவாக்கி கண்களில் எரிச்சலை எற்படுத்துகின்றது. இத்தகைய பிரச்சனைகள் அதிகம் அளவில் உட்புற நிச்சல் குளங்களிலே உண்டாகின்றன. அதற்கு காரணம், உட்புறமாக அமைந்துள்ள நீச்சல் குளப்பகுதியில்  வெளிப்புற காற்றானது உள்நுழையாமையால் காற்றின் சுழற்சி தடைப்படுகின்றது. ஆகா, தூய்மையான காற்றானது முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியுள்ளனர்.

நீச்சலின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு பற்றி நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் மிசேல் ஹலவ்சா கூறுகையில், ஆரோக்கியமாக வாழ்வதற்கு மிகச்சிறந்த வழியான உடற்பயிற்சி தான் நீச்சல் ஆகும். நீச்சல் குளங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்களை தாங்களே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, தொற்று நோய்கள் பரவாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், நீச்சல் குளங்களை பயன்படுத்தும் முன்பு ஷோவேரில் முழுவதுமாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நீச்சல் குளங்களில் உள்ள குளோரினின் தன்மையை கண்டறியும் கருவியை பயன்படுத்துவது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகா, வியர்வை மற்றும் சிறுநீரால் குளங்களை அசுத்தம் செய்வதைவிடுத்து சுத்தமாக பயன்படுத்தி வந்தால் கண் எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader