This article is from Nov 16, 2017

பிரதமர் பயணித்த ஹெலிகாப்டரில் குர்மித் சாமியாரா ?

பரவிய செய்தி

மோடி பிரதமராக பயணிக்கும் அதே ஹெலிகாப்டரில் பாலியல் வழக்கில் கைதான குர்மித் ராம் ரஹீம் பயணிக்கிறார்.

மதிப்பீடு

சுருக்கம்

குர்மித் ராம் ரஹீம் சாமியார் கைதாகி செல்லும் AW139 ரக ஹெலிச்ப்டரானது தனியார் நிறுவனதிற்கு சொந்தமானது ஆகும்.

விளக்கம்

 சாமியார் குர்மித் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவித்தப் பின்னர், அவரை சிறைச் சாலைக்கு அழைத்து செல்ல பயன்படுத்திய ஹெலிகாப்டரானது, இந்திய பிரதமர் மோடி அவர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் என்று பரவிய செய்திகளால் சர்ச்சைகள்  எழுந்துள்ளது.

தேரா சச்சா சவ்தா என்ற அமைப்பின் தலைவர் தான் குர்மித் ராம் ரஹீம். இவரின் அமைப்பிற்கு உலகம் முழுவதும் 46 ஆசிரமங்கள் உள்ளன. குர்மித் ராம் ரஹீம் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவர்க்கு z+ பாதுக்கப்பு வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டில் நடந்த ஹரியானா தேர்தலின் போது பாதிய ஜனதா கட்சியை ஆதரித்தார். அதற்க்கு முன்பு காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார்.

2002 ஆம் ஆண்டு குர்மித் ராம் ரஹீம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாகக் கூறி அவரின் பெண் சீடர் ஒருவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து நடந்த சி.பி.ஐ விசாரணையில் சாமியார் இரு பெண்களை பலாத்காரம் செய்தாக தெரிய வந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கின் வாதம் முடிவடைந்து  தீர்ப்பு ஆகஸ்ட் 28, 2017 அன்று வழங்கப்படும் என்ற நீதிபதியின்  அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வெடித்த கலவரத்தில் 30 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

கலவரத்தை கருத்தில் கொண்டு சாமியார் குர்மித் ராம் ரஹீம் ஹெலிகாப்டர் மூலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்படி அவரை அழைத்துச் செல்ல பயன்படுத்திய ஹெலிகாப்டரானது பிரதமர் மோடி அவர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர் என்று கூறி சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி அவர்கள் பயன்படுத்திய ஹெலிகாப்டரும், குர்மித் சாமியாருக்கு பயன்படுத்திய ஹெலிகாப்டரும் AW139 என்ற ரகத்தை சேர்ந்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ரக ஹெலிகாப்டர்கள் வி.ஐ.பிகள் மற்றும் தனியாருக்கு சொந்தமானது ஆகும். இரண்டு ஹெலிகாப்டர்களும் DLF என்ற  தனியாருக்கு சொந்தமானது. இதை தவறாக புரிந்துக் கொண்டு பிரதமரின் ஹெலிகாப்டரில் பாலியல் வழக்கில் கைதான சாமியார் செல்கிறார் என்று வதந்தியை பரப்பியுள்ளனர்.

இச்செய்திகள் உண்மையில்லை என்றாலும் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் ஆடம்பரமாக ஹெலிகாப்டரில் செல்வது, நம் நாட்டில் சாமியார்களுக்கு எத்தகைய மரியாதைகள் கொடுக்கப்படுகிறது என்று அறிந்துக் கொள்ள முடிகிறது.மக்களின் மனநிலை மாறாவிடில் இவரை போன்ற போலி சாமியார்கள் வந்துகொண்டே தான் இருப்பார்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader