This article is from Nov 16, 2017

பெப்சி உடனான ஒப்பந்தத்தை கோஹ்லி நிறுத்திக் கொண்டார்.

பரவிய செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி பெப்சி கோ நிறுவனத்துடன் தனது விளம்பர ஒப்பந்தத்தை நீட்டிப்பதை நிறுத்தி உள்ளார் . தான் உபயோகப்படுத்தாத ஒரு பொருளை பணத்திற்காக அடுத்தவர்களை வாங்க சொல்லுவது நியாயம் இல்லை என்று கூறியுள்ளார் .

மதிப்பீடு

சுருக்கம்

ஜூன் 2017  இல் காலாவதியாகும் பெப்சி கோ உடனான ஒப்பந்தத்தை தொடர போவதில்லை என்று கோஹ்லி கூறியுள்ளார்

விளக்கம்

முன்பெல்லாம் ஒரு பொருளானது தரமானதாக இருந்தால் அதை வாங்கி உபயோகப்படுத்தி வந்தனர் .

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொருளை எவ்வாறு விளம்பரம் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே அதன் விற்பனை அமைந்துள்ளது . அத்தகைய விளம்பரங்களுக்கு நடிகர்களையும் , பிரபலமானவர்களையும் , விளையாட்டு வீரர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் , இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி பெப்சி கோ நிறுவனத்துடன் விளம்பரத்திற்காக செய்த ஆறு வருட கால ஒப்பந்தத்தை தொடர்வது இல்லை என்று கூறியுள்ளார் .

2017 மார்ச் மாதம் விராட் கோஹ்லி மற்றும் அவரது அணியினர் மென்மையான பானமான பெப்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் பற்றி பேச்சுவார்த்தை நடந்தினர் . கோலா தொடர்புடைய சுகாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை கருத்தில் கொண்டு ஒப்பந்தத்தை தொடர்வதில்லை என்று கூறினர் . கோஹ்லின் தனிப்பட்ட உடல்நலம் , உடற்பயிற்சி ஆகியவற்றிக்கு முற்றிலும் வேறுபட்டது இந்த குளிர்பானம் .

ஒப்பந்தமானது பல கோடி ரூபாய் பிரான்ட் ஒப்புதல் பெரும் வாய்ப்புள்ளது . நான் பணம் சம்பாரித்து வந்தாலும் இது போன்ற பானங்களை சாப்பிடுவது இல்லை என்றால் மற்றவர்களை வாங்க நான் தூண்டிவிடமாட்டேன் என்று கூறியுள்ளார் . இதனால் கோஹ்லி தனது ஒப்பந்தத்தை தொடர வாய்ப்பில்லை என்று தெரிகின்றது .

11 ஆண்டுகளாக பெப்சி கோ நிறுவனத்துடன் இணைந்து வந்த மகேந்திர சிங்க் தோனி 2016 ஆண்டில் காலாவதியாகும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறுப்பிடத்தக்கது . இவ்வாறு தாங்கள் உண்ணாத பொருள்களை தான் பிரபலமானவர்கள் நல்லது என்று கூறி விளம்பரம் செய்கின்றனர் .

உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை எவ்வளவு பெரிய பிரபலங்கள் நல்லது என்று கூறினாலும் அவற்றை ஏற்காமல் மக்கள் தான் விழிப்புணர்வோடு இருத்தல் அவசியம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader