This article is from Nov 11, 2017

மகிழ்ச்சியை அளிக்க நடைபயணம் செய்யும் நாடோடி சிங்கம்.

பரவிய செய்தி

UK வை சேர்ந்த NGO அமைப்பின் நிறுவனர் டேவிட் அத்தோவே நாடோடி சிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நிதி திரட்ட கன்னியாகுமரி முதல் அம்ரித்சர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார் .

மதிப்பீடு

சுருக்கம்

நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இவ்வுலகில் சிறிதாவது இருக்கத்தான் செய்கிறார்கள் ..

விளக்கம்

 உண்மையில் நல்ல உள்ளம் கொண்டவர் டேவிட் அத்தோவே . UK வை சேர்ந்த NGO ஒருவர் இந்தியாவின் விவசாயிகள் குடும்பங்களுக்கு உதவ வந்துள்ளது பாராட்டப்பட வேண்டிய செயல் . டேவிட் அத்தோவே  walk of joy india என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவர் நாடோடி சிங்கம் என்று அழைக்கப்படுகிறார் . இவரின் நோக்கம் நடைபயணம் மூலம் நிதி திரட்டி வணிக நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஆகும் .

இந்த பயணம் ஜூலை 15 2017 தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியில் தொடங்கி 13 மாநிலங்களில் 6000 km தொலைவை கடந்து மே 2018 இல் பஞ்சாபில் உள்ள அம்ரித்சரில் முடிவடைகிறது . நடைபயணத்தில் விவசாயிகள் , அரசு சாரா நிறுவனங்களுக்கு நிலையான விவசாயம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்யவும் , வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்புகொள்ளுமாறு  பேச உள்ளார் .

நடைபயணத்தின் நோக்கம் இந்தியாவில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் , நல்ல கருத்துகளை கூறுவது ஆகும் . இதனால் திரட்டப்படும் நிதியானது ஆதரவற்ற விவசாயிகளின் குடும்ப பெண்களுக்கு மாத உதவி தொகையாகவும் , குழந்தைகளுக்கு கல்வி உதவிக்காகவும் வழங்கப்படும் . இந்த அமைப்புடன் சில தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து உதவி செய்ய உள்ளன .

இவர்களின் லட்சியம் பிரச்சாரம் மூலம் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுவது ஆகும். உதவ முன் வருபவர்கள் www.walkofjoy.in என்ற இணைய முகவரியை அணுகுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் .

உலகத்தில் மனிதநேயம் சிறிதாவது உள்ளது என்பதற்கு இவர்களே சான்று . நாட்டு மக்களுக்கு அரசு செய்ய வேண்டிய கடமைகளை இவர்கள் போன்றவர்கள் செய்ய முன்வந்துள்ளனர் .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader