This article is from Nov 11, 2017

மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி.

பரவிய செய்தி

மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட இந்திய அரசாங்கம் அனுமதி வழங்க உள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

வெளிநாட்டில் இயற்கை பயிர்களை விவசாயம் செய்ய முயற்சி செய்கின்றார்கள் , நம் நாட்டில் செயற்கைக்கு மாற ஆசைப்படுகின்றார்கள் ..

விளக்கம்

 இந்திய சமையல் பொருள்களில் மிகவும் இன்றியமையாத பொருள் கடுகு . நெடுங்காலமாக பயன்பாட்டில் உள்ளது என்று அனைவரும் அறிந்ததே . அப்படிப்பட்ட கடுகை மரபணு மாற்றம் செய்து வணிகத்தில் விற்பனை செய்ய எண்ணியுள்ளது இந்திய அரசாங்கம் .

ஜெனரல் இன்ஜினியரிங் அட்வைசனல் கமிட்டி GM கடுகிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது . சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கினால் வணிக பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வந்து விடும் . இந்தியாவில் வணிகரீதியாக தொடங்கப்படும் முதல் மரபணு மாற்றம் செய்த உணவு பயிர் இது தான் .

மரபணு மாற்றம் செய்த பயிர்களை உற்பத்தி செய்வதற்கு முக்கிய காரணமே அதிக மகசூல் , பூச்சி எதிர்ப்பு , வேகமாக வளரக்கூடிய பண்பு . இவற்றிக்காகவே மரபணு மாற்றம் செய்த பயிர்களை உற்பத்தி செய்ய விரும்பிகின்றன .

ஆனால் கடுகை பொறுத்தவரை இது தேவை இல்லை என்று தான் கூற வேண்டும் . கடுகின் பயன்பாடு சிறிதுதான் என்றாலும் , தேவைக்கு ஏற்ப உற்பத்தி நம் நாட்டில் உள்ளது .

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கடுகு சாகுபடி செய்யும் நிலப்பரப்பு 12 கோடி ஹெக்டேர்களாகவும் விளைச்சல் 5 கோடி டன்களாகவும்  இருந்தது . ஆனால் 2015-2016 ஆண்டில் சாகுபடி பரப்பு 14 கோடி ஹெக்டேர்களாகவும் மட்டுமே அதிகரித்து 25.22 கோடி டன்களாக பெருகி உள்ளது .

கடுகு விளைச்சல் நன்றாக இருக்கையில் மரபணு மாற்றம் செய்த GM கடுகை கொண்டு வருவது விவசாயத்தை அளிக்கும் செயலாகும் . மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்க்கு எவ்வாறு எதிர்ப்புகள் பெருகி அதற்கு அனுமதி வழங்காமல் செய்தார்களோ அதே போல் கடுகிற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் .

ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுவருகின்றனர் . இந்த நிலையில் மரபணு மாற்றம் செய்த பயிர்களை கொண்டு வந்து மண்ணை மலடாக்க பார்கின்றார்கள் .

Please complete the required fields.




Back to top button
loader