This article is from Nov 16, 2017

ரிசர்வ் வங்கி புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.

பரவிய செய்தி

புதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் விரைவாக மக்களின் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

புதிதாக அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் வெளியானாலும், நாட்டில் உள்ள பழைய 50 ரூபாய் நோட்டுக்களும் தொடர்ந்து செல்லும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது .

விளக்கம்

சென்ற வருடம் நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதை தொடர்ந்து நாட்டில் புதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால்  வெளியிடப்பட்டது. பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 நோட்டுகள் வெளியாகின.

  சில தினங்களாக நீல நிறத்தில் உள்ள புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. மேலும் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வரும் புத்தாண்டு முதல் மக்களின் புழக்கத்திற்கு வரும் என்றும் கூறி பல செய்திகள் வருகின்றன.

 இதை உறுதிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதிய 50 நோட்டுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் புதிய வடிவமைப்பில் அச்சடிக்கப்பட்ட 50 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளன. மேலும் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளியாகும் புதிய நோட்டுகளின் பின்புறத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேரின் புகைப்படம் இடம்பெற்று உள்ளது என்று கூறியுள்ளனர். புதிய நோட்டுகள் வந்தாலே பழைய நோட்டுகள் செல்லாது என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே புதிய நோட்டுகள் வந்தாலும், நாட்டில் உள்ள பழைய 50 ரூபாய் நோட்டுக்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெளிவாக கூறியுள்ளது.

  எனினும் புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளே இன்னும் வெளியாகாத நிலையில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் எப்பொழுது வெளியாகும் என்று தெரியவில்லை.

Please complete the required fields.




ஆதாரம்

RBI

Back to top button
loader