This article is from Dec 02, 2017

10 ரூபாய் காசு செல்லா காசா ?

பரவிய செய்தி

1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது . எனவே 1௦ ரூபாய் நாணயங்களை யாரும் வாங்கவேண்டாம் .

மதிப்பீடு

சுருக்கம்

வங்கிகளில் பழைய 1000 , 500 ரூபாய் நோட்டுகள் வைக்கவே இடம் இல்லாததால் 10 ரூபாய் வாங்க மறுத்தனர். இதே வதந்தியாக பரவியது .

விளக்கம்

நாட்டில் 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது என்ற பரவிய செய்தியால் பல இடங்களில் 10 ரூபாய் வாங்கப்படாமல் இருந்தது . மேலும் போலியான நாணயம் , செல்லாத நாணயம் என்று எழுதிய தாள்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டன .

அத்தியாவசிய விற்பனை பொருள்கள் வாங்கும் இடம் , பெட்ரோல் பங்குகள் , சந்தைகள் போன்றவை மட்டும் அல்லாமல் அரசு போக்குவரத்து வாகனங்களில் கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர் . இவ்வாறு தவறான செய்தியால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர் . ஒருசிலர் தங்களிடம் உள்ள நாணயங்களை வங்கி கணக்குகளில் செலுத்த தொடங்கினர் .

10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்தது உண்மை என்றாலும் அதற்கான காரணத்தை எவரும் புரிந்துக் கொள்ளவில்லை . ஒருசில சிறு வங்கிகள் தங்களிடம் அதிகப்படியான நாணயங்கள் வைக்க போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் பைகளில் நிரப்பிக் கொண்டு வரும் நாணயங்களை வாங்க மறுத்தனர் .

குறிப்பாக நாட்டில் 1000 , 500 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் போதுமான பாதுகாப்பான இடவசதி இல்லை என்பதால் வாங்க மறுத்துள்ளனர் . இதனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று தவறாக புரிந்துக் கொண்டு அதிவேகமாக செய்திகள் பரவியது .

மேலும் 2011 ற்கு பிறகு வந்த நாணயங்களில் ரூபாய் குறியீட்டை அறிமுகம் செய்தனர் . எனவே பல நாணயங்களில் வேறுபாடுகள் காணப்பட்டதால் போலியான நாணயங்கள் என்று தவறாக புரிந்துக் கொண்டனர் . இதுபோன்ற தவறான தகவல்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader