வயதான குழந்தை பிறந்துள்ளது, உலகின் அழிவு ஆரம்பமா ?

பரவிய செய்தி

உலகின் அழிவு ஆரம்பமா? மக்கள் பதற்றம். உலகின் இறுதி நாளின் அடையாளமாக வயதான குழந்தை வட இந்தியாவில் பிறந்துள்ளது. சித்தர்கள் கூறியது போல் வயதான ஏழைக் குழந்தைப் பிறந்துள்ளது. குழந்தையின் இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 என்று தெரியவந்துள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

உலக அழிவின் ஆரம்பத்தை குறிக்கும் நிகழ்வாக வயதான தோற்றத்துடன் ஓர் குழந்தை இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தையின் இரத்த மாதிரி சோதனையில் 105 வயது என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, சித்தர்கள் கூறியது போல் வயதான குழந்தை பிறந்ததை கண்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் என்றுக் கூறி சமூக வலைதளங்களில் குழந்தையின் படங்கள் பரவி வருகிறது.

Advertisement

ஜூலை 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த எட்டு மாத கர்ப்பிணியான மம்தா தோடே என்ற பெண்ணுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை 800 கிராம் எடையுடன் மட்டுமே உள்ளது என்றும், குழந்தைக்கு சில மருத்துவ சோதனைகளை செய்யவிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குழந்தையின் தந்தையான அஜய் தோடே மற்றும் மம்தா தோடேவும் சில மணி நேரங்களுக்கு பிறகு குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை “wrinkly” என்ற விசித்திரமான தோல் நோயால் வயதான தோற்றத்துடன் பிறந்து உள்ளது. குழந்தையின் பெற்றோர் இருவருமே 25 வயதுடையவர்கள், அவர்களுக்கு பயல் என்று இன்னொரு குழந்தையும் உள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தை அரிதான நோயுடன் பிறந்ததை எண்ணி வருத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குழந்தை பிறந்து இரண்டு வார காலத்தில் அக்குழந்தையை பெற்றோர் ஏற்க மறுத்துள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு தாய் பால் அற்ற நிலையில் ஆட்டின் பாலை கொடுத்து அக்குழந்தையின் தாத்தா திலிப் தோடே பராமரித்துவந்துள்ளார். தனது பேத்திக்கு ஏற்பட்ட நிலையை கண்டு வருந்தி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மும்பையில் உள்ள wadia private hospital  குழந்தையின் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் அளிப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், குழந்தைக்கு ஏற்பட்ட நோயினை குணப்படுத்தும் நோக்கத்தில் பல மருத்துவ முறைகளை கையாள இருப்பதாகவும், குணமாக்கும் வரை குழந்தை மருத்துவமனையிலே இருக்கலாம் என்று அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியுள்ளார்.

தோல் நோயுடன் பிறந்த குழந்தையின் படத்தை வைத்து உலகம் அழியப் போகிறது என்று சிலர் வதந்தியைப் பரப்பியுள்ளனர் என்பதை நாம் இதிலிருந்து அறிய முடிகிறது,

Advertisement
Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button