ஜம்மு காஷ்மீரில் 12,000 வருடப் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி

ஜம்மு காஷ்மீரில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

12,000 வருடங்கள் பழமையான விஷ்ணு சிலை ஒன்று ஜம்மு காஷ்மீரில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்த உண்மைத்தன்மையினை கண்டறியுமாறு சுமிர் லார்வேர்த் (Sumer Iorveth) என்பவர் யூடர்ன் டிவிட்டர் பக்கத்தை டக் செய்திருந்தார்.

Archive twitter link 

உண்மை என்ன ?

12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை எனக் கூறப்படும் புகைப்படத்தினை இன்பர்மேசன் (Infomance) என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். 

இந்த புகைப்படம் குறித்து 2022 மார்ச் 31ம் தேதி ஏஎன்ஐ செய்தி நிறுவனம், காஷ்மீர் லைப் (Kashmir Life) போன்ற இணைய தளங்களில் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன. 

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்திலுள்ள, காகபோராவில் லெல்ஹர் கிராமத்திலுள்ள ஜீலம் நதியில் மணல் எடுக்க சிலர் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்பணியின்போது மூன்று தலையுள்ள விஷ்ணு சிலை ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது.

அந்த சிலை குறித்து அக்கிராம மக்கள் காகபோரா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அச்சிலை ஜம்மு காஷ்மீர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிலையானது கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. 

இதே போன்று 2022, ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீர் புத்காம் மாவட்டத்தில் பழங்கால விஷ்ணு சிலை ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கி.பி. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இது காந்தாரா மற்றும் மதுரா கலை பாணியில் செதுக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சென்னை அருகே அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி

இதற்கு முன்பாக, சென்னை அருகே கிடைத்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிலையை 12,000 ஆண்டுகள் பழமையான சிலை எனப் பரப்பப்பட்ட வதந்தி குறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு :

நம் தேடலில், ஜம்மு காஷ்மீரில் 12,000 வருடம் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பகிரப்படும் தகவல் உண்மை அல்ல என அறிய முடிகிறது. அந்த சிலை கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்தது என தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்துறை  தெரிவித்துள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader