அகல் விளக்கு நிகழ்ச்சிக்கு 133 கோடி செலவிட்டாரா யோகி ஆதித்யநாத் ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

உத்தரப் பிரதேச யோகி அரசு இந்த வருடன் தீபாவளியன்று விளக்கெரிக்க 133 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ஒவ்வொரு தீபாவளியின் போதும் விளக்கெரிக்கும் கொண்டாட்டங்களை நடத்துகிறது யோகி அரசு.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின் போது 5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றுவதற்காக 133 கோடி ரூபாயை ஒதுக்கியதாக முகநூலில் தமிழில் பதிவுகளை காண நேரிட்டது. தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் இந்த தகவல் பரவி இருந்தது என்பதை அறிய முடிந்தது.

Advertisement

Facebook link | archived link 

தமிழில் மட்டுமல்லாமல் பிற மாநிலத்திலும் , சாக்சி ஜோஷி போன்ற பத்திரிக்கையாளர்கள், சில செய்தி இணையதளங்கள் கூட உத்தரப் பிரதேச அரசு அகல் விளக்குகளை ஏற்றும் நிகழ்ச்சிக்கு 133 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக பதிவிட்டு இருந்தனர்.

Twitter post archived link  

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியா நகரில் உள்ள சரயு நதியோரத்தில் தீபாவளி பண்டிகையின் போது லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு. கடந்த ஆண்டில் 4 லட்சத்து 10 ஆயிரம் அகல் விளக்குகளை ஏற்றி சாதனை படைத்து இருந்தனர்.

2019 அக்டோபர் 26-ம் தேதி கிட்டத்தட்ட 5.51 லட்சம் அகல் விளக்குகளை சரயு ஆற்றங்கரையில் ஏற்றி சாதனை படைத்து உள்ளனர். இதற்காக உத்தரப் பிரதேச அரசு 133 கோடியை செலவிட்டு இருப்பதாக தவறான செய்திகள் பரவி வருவதாக NDTV -ஐ சேர்ந்த Alok pandey தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter post archived link  

உத்தரப் பிரதேச மாநில அரசு லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடும் நிகழ்ச்சிக்காக செலவிட்ட தொகை 1.32 கோடியாகும். அதனை 133 கோடி எனத் தவறாக பரப்பி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் 132.70 லட்சம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதனை 133 கோடி என தவறாக புரிந்து கொண்டு செய்திகளை பரப்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக உத்தரப் பிரதேச அரசு அகல் விளக்குகளை ஏற்றி தீபாவளி நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close