13 இலக்க எண்கள் கொண்ட அழைப்பால் வெடித்து மரணமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
ஹாய் பிரண்ட்ஸ், இப்போ நம்ம தமிழ்நாட்டுல ஏதோ புதுசா ட்ரெண்ட் பண்ணுறங்கலாம். ஏதோ 13 நம்பரில் இருந்து, 6 நம்பரில் இருந்து கால் வந்தா அட்டன் பண்ண இரண்டாவது செகண்ட் செல்போன் வெடிக்குதாம். தூக்குதுக்குடியில 27 பேருக்கு பண்ணிருக்காங்கனு எனக்கு ஒரு ஃபார்வர்டு மெஜேஜ் வந்துச்சு. அதேபோல், சென்னையில இருந்து ஒரு நண்பர் பேசி அனுப்பி இருக்காரு, சிங்கப்பூரில் இருக்கிற என் பிரண்ட்ஸ் ஷேர் பண்ணாங்க. உங்களால் முடிஞ்ச வரைக்கும் ஷேர் பண்ணுங்க !!
மதிப்பீடு
விளக்கம்
13 இலக்க மற்றும் 6 இலக்க எண்களை கொண்டு வரும் செல்போன் அழைப்புகளை அட்டன் செய்தால் அடுத்த சில நொடிகளில் செல்போன் வெடித்து விடுவதாக இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் ஒருவரின் புகைப்படத்தை வைத்து பேசப்பட்ட 30 நொடிகள் கொண்ட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
புகைப்படத்தில் இறந்த நிலையில் இருப்பவரின் உடல் இரத்த வெள்ளத்தில் இருப்பதால் அந்த வீடியோவை பதிவிடவில்லை. வைரல் செய்யப்படும் புகைப்படம், வீடியோ மற்றும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இரத்த வெள்ளத்தில் இருக்கும் உடல் அருகே இருக்கும் கடையின் கண்ணாடியில் அதிமுக கொடியின் வண்ணத்தில் ” அம்மா பொது இசேவை மையம் ” என எழுதப்பட்டு இருந்தது.
ஆகையால், சமீபத்தில் அதிமுக பிரமுகரோ, அதிமுக அலுவலகத்தில் யாரும் இறந்தார்களா எனத் தேடுகையில், ” ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் இசேவை நடத்தி வரும் அதிமுக பிரமுகரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ” என ஆகஸ்ட் 3-ம் தேதி updatenews360.எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
வாசகர்கள் தரப்பில் உயிரிழந்தவரின் புகைப்படங்கள் நமக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அந்த புகைப்படங்களும், கொலை செய்யப்பட்டவரின் புகைப்படங்களும் ஒன்றாக இருக்கின்றன. கொலை நிகழ்ந்த இசேவை மையமும் மேற்காணும் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது.
ஆகஸ்ட் 3-ம் தேதி ” ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் அரிவாளால் வெட்டி படுகொலை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு ” எனும் தலைப்பில் தினத்தந்தியும் கொலை சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : 13 இலக்க எண் அழைப்புகளால் செல்போன்கள் வெடிக்குமா ?
13 இலக்க எண்கள் கொண்ட செல்போன் அழைப்புகள் வருவதாகவும், செல்போன்கள் வெடிப்பதாகவும் பரப்பப்படும் தகவல்கள் வதந்தியே. இந்த வதந்தி கடந்த பல ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகிறது. 2018-ல் தவறான புகைப்படங்கள் உடன் இதே வதந்தி தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.