1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் கட்டிய கோவிலில் கம்ப்யூட்டர் சிற்பமா ? உண்மை என்ன ?

பரவிய செய்தி

1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட தாளகிரி சிவாலயத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டுடன் ஓர் சிற்பம் கல்லிலே சுவற்றில் உள்ளது இது எப்படி சாத்தியம் அப்போது மின்சாரம் இல்லை எந்த ஒலி ஒளியை பயன்படுத்தியிருப்பார்கள் அல்லது எந்த வழியை கையாண்டிருப்பார்கள் !

மதிப்பீடு

விளக்கம்

பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட 1400 ஆண்டுகள் பழமையான தாளகிரி சிவாலய கோவிலில் உள்ள சிற்பத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டு அருகே ஒருவர் அமர்ந்து இயக்குவது போல் இடம்பெற்று இருப்பதாகவும், இது எப்படி சாத்தியம் எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Archive link 

இதற்கு முன்பாகவே, சிற்பத்தில் ஒருவர் கம்ப்யூட்டர் மற்றும் கீபோர்டில் டைப் செய்வதாக ஆங்கிலத்தில் இதே புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து இருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

 உண்மை என்ன ? 

பல்லவ மன்னன் கட்டிய கோவிலில் உள்ள பழமையான சிற்பம் எனக் கூறி தமிழில் வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில் ,” Aztecc Computer ” மெக்சிகன் ஆர்ட் ஓர்க் என சில இணையதளங்களில் இப்படத்தை பயன்படுத்தி உள்ளனர் .

இப்படம் குறித்து மேற்கொண்டு தேடிய போது, 2003-ல் வெளியான Cosmos Latinos: An Anthology of Science Fiction from Latin America and Spain எனும் அறிவியல் புனைவுக் கதை புத்தகத்தின் அட்டைப் படத்தில் வைரல் செய்யப்படும் படம் இடம்பெற்று உள்ளது. 

ஸ்பெயின் மற்றும் லத்தின் அமெரிக்கா தொடர்பான அறிவியல் புனைவுக் கதை புத்தகத்தின் அட்டைப் படத்தில், ஒருவர் கம்ப்யூட்டரை இயக்குவது போல் இடம்பெற்ற படத்தை பல்லவ மன்னன் கட்டியக் கோவிலில் உள்ள சிற்பம் என தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனால் கட்டப்பட்ட தாளகிரி சிவாலயத்தில் கம்ப்யூட்டர் மற்றும் கீ போர்டுடன் ஓர் சிற்பம் கல்லிலே சுவற்றில் உள்ளதாகப் பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த படம் 2003-ல் வெளியான ஸ்பெயின் மற்றும் லத்தின் அமெரிக்கா தொடர்பான அறிவியல் புனைவுக் கதை புத்தகத்தில் இடம்பெற்ற படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader