This article is from Jun 29, 2021

1809-ல் உலகின் முதல் இரயில் பயணம் தொடங்கிய வீடியோவா ?

பரவிய செய்தி

உலகின் முதல் ரயில் ஓட தொடங்கியது, சுமார் 211 ஆண்டுகளுக்கு முன்பு 1809 டிசம்பர் 24ல் வீடியோ பார்க்க வேண்டியது. பயணத்தின் போது சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்..

மதிப்பீடு

விளக்கம்

சுமார் 211 ஆண்டுகளுக்கு முன்பாக 1809-ல் டிசம்பர் 24-ல் உலகின் முதல் இரயில் இயக்கப்பட்ட காட்சிகள் என 3 நிமிடம் கொண்ட இவ்வீடியோ கடந்த ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

உலகின் முதல் இரயில் தொடங்கிய காட்சி குறித்து தேடுகையில், 2015 முதலே இவ்வீடியோ யூடியூப் உள்ளிட்டவையில் பகிரப்பட்டுள்ளன. ஆனால், இந்த வீடியோ முதல் இரயில் இயக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் அல்ல.

உண்மையில், 1923-ம் ஆண்டில் ” Our Hospitality ” எனும் பெயரில் வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சியே இவை. 1830-ம் காலக்கட்டத்தில் உள்ளது போன்று அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட இருக்கிறது.

இங்கிலாந்தில் ஸ்டோக்டன் மற்றும் டார்லிங்டன் ரயில்வே முதல் பொது பயணிகள் நீராவி எஞ்சின் ரயிலை 1825 செப்டம்பர் 27-ல் டார்லிங்டனில் இருந்து ஸ்டோக்டன் வரை இயக்கப்பட்டது. Our Hospitality திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரி இரயில் அமைப்பு 1830-ல் ஜார்ஜ் ஸ்டீபன்சன் லோகோமோட்டிவ் உடையது.

முடிவு :

நம் தேடலில், 1809 டிசம்பர் 24ல் உலகின் முதல் இரயில் ஓட தொடங்கிய போது எடுக்கப்பட்ட காட்சி என பகிரப்படும் வீடியோ 1923-ல் வெளியான திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவே. மேலும், இது 1809-ல் இயக்கப்பட்ட இரயில் அமைப்பை வைத்து எடுக்கப்பட்டவை அல்ல, 1830களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader