ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்கள்! கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்டவையா ?

பரவிய செய்தி

179 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கிந்திய கம்பெனியால் வெளியிடப்பட்ட ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்கள்.

மதிப்பீடு

சுருக்கம்

கிழக்கிந்திய கம்பெனி என்கிற பெயரில் இந்து கடவுள்கள் உருவம் பொறித்த போலியான நாணயங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விளக்கம்

ந்தியாவை ஆட்சி செய்த காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் நாணயங்களில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கால் அனா, அரை அனா, 1 அனா எனும் மதிப்புடைய நாணயங்களில் சிவன், பார்வதி, காளி, ஹனுமான், ராமர், சீதா உருவங்கள் பொறித்தவை அதிகம் வெளியாகியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

Advertisement

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் 179 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளைக்காரன் வெளியிட்ட நாணயம் என்றுக் கூறி 1839-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி ஒருபுறமும், மறுபுறம் ராமர், சீதா, லட்சுமன், ஹனுமான் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார்.

உண்மையில், கிழக்கிந்திய கம்பெனி இந்து கடவுள்கள் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டதாக என்று தேடுகையில், மேலே குறிப்பிட்டது போன்று பல நாணயங்களை பார்க்க முடிந்தது. அவை அனைத்திலும் 1616, 1717,1818 என்ற வருடங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் 1835 ஆம் ஆண்டிற்கு முன்பாக வரை பம்பாய், கொல்கத்தா, மெட்ராஸ் தலைமையின் கீழ் நாணயங்கள் வெளியிடப்பட்டு வந்தனர். 1835-க்கு பிறகு அவை அனைத்தும் கலைக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரேமாதிரியான நாணயங்கள் வெளியிடுவதை கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தியது.

இந்து கடவுள்களின் உருவங்கள் பொறித்த கிழக்கிந்திய கம்பெனியின் நாணயங்கள் எனப் பரவும் நாணயங்கள் யாவும் உண்மையில் பழமையானவை அல்ல. நாணயவியல் குறித்த விவரங்களில் இந்து கடவுள் மற்றும் சமயம் சார்ந்த குறியீடுகள் பொறித்த நாணயங்களை Ramatanka or Temple Tokens என்றழைப்பர். Temple Tokens அனைத்தும் கடவுள் உருவம் மற்றும் இந்து சமயக் குறியீடுகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதற்கு அதிகாரப்பூர்வமாக பண மதிப்பில்லை.

இது போன்ற பழங்கால நாணயங்கள் என்றுக் கூறி அதில் தவறான வருடங்களை அச்சிட்டு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். Ebay உள்ளிட்ட ஆன்லைன் வணிகத் தளங்களில் ஒரு Temple Token நாணயத்தின் மதிப்பு ரூ.200 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

யார் எதற்காக இதை செய்கிறார்கள் என்றால், இவை சுற்றுலாப் பயணிகளுக்காக தயாரிக்கப்படுகிறது. எனினும், கள்ள சந்தையில் போலியான நாணயங்களை உண்மை என்றுக் கூறி விற்பனை செய்யவும் இவ்வாறு வடிவமைப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்படும் பிரிட்டிஷ் நாணயங்கள் பெரும்பாலும் இவற்றை சார்ந்தவையே. அரிதான நாணயங்கள் என்று கூறுவதால் பார்க்கும் அனைவரும் எளிதில் இவற்றை நம்பி விடுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் போலியான நாணயங்கள் என்பதே நிதர்சனம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button