இந்தியா சீனா போரில் ஆர்எஸ்எஸ் பங்கேற்ற புகைப்படம் என அர்ஜுன் சம்பத் பரப்பும் வதந்தி !

பரவிய செய்தி

1963 இந்தியா-சீனா யுத்தத்தின்போது இராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று போர்முனையில் இந்திய ராணுவத்திற்கு உதவியாக 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் பயிற்சிபெற்ற தொண்டர்கள் பணியாற்றினர். உணவு, ஆயுதங்கள் எடுத்து செல்வது காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவை பணிகள் செய்தனர்.

Twitter link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

1963ம் ஆண்டு நடந்த இந்தியா சீனா போரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்வயம் சேவர்கள் இந்திய ராணுவத்தின் வேண்டுகோளை ஏற்று கலந்து கொண்டதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், இதனைக் கௌரவிக்கும் விதமாக 1963 நேரு ஆர்எஸ்எஸ் அமைப்பினரை குடியரசு தினத்திற்கு அழைத்ததாகவும் ஆர்எஸ்எஸ்காரர்களால் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

இதுகுறித்து இணையத்தில் தேடியப்பொழுது, அர்ஜுன் சம்பத் பதிவிட்டுள்ள புகைப்படத்தின் கீழே life என்ற வார்த்தை இருந்தது. அதை இணையத்தில் தேடியப்பொழுது அந்தப் புகைப்படம் oldindianphotos என்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதில், 1962ம் ஆண்டு இந்தியா சீனா போரின் போது அசாமில் இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என அதற்கு தலைப்பு வைத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

Advertisement

Archive Link 

மேலும், இதுகுறித்து தேடியப்பொழுது டைம்ஸ் பத்திரிக்கை 1962 போரின் 50ம் ஆண்டுவிழா குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அதிலும் இந்தப் புகைப்படம் இந்தியா-சீனா போரின் போது இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றே பதிவிட்டுள்ளது.

Article Link

வைரலாகி வரும் புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரும் சீக்கியர்களாகவே உள்ளனர். வெள்ளை பனியன், காக்கி டிரௌசர் போட்டுள்ளார்கள் என்பதை மட்டுமே வைத்து அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மேலும், ஆர்.எஸ்.எஸ்-ல் சீக்கியர்கள் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்க்கையில், ஆர்.எஸ்.எஸ் உடைய சீக்கிய அமைப்பான ராஷ்ட்ரிய சீக் சங்கத் எனும் அமைப்பு 1985ம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியா சீனா போர் 1962ம் ஆண்டு நடந்தது .

மேலும், அர்ஜுன் சம்பத் தனது பதிவில் 1963 இந்தியா சீனா போர் எனப் பதிவிட்டுள்ளார். ஆனால் உண்மையில் 1962 இறுதியிலே போர் முடிவுப்பெற்றது. அதேபோல், அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில் 1965 இந்தியா சீனா போர் என எழுதியிருந்தது. உண்மையில் 1965ல் நடந்தது இந்தியா பாகிஸ்தான் போர்.  இப்படி அவர்களின் பதிவிலே பல குளறுபடிகள் உள்ளது.

1962-ல் இந்தியா மற்றும் சீனா போரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்கள் பங்களிப்பை வழங்கியதாகவும், இதற்காக 1963 குடியரசு தினத்தில் நேரு அவர்களை அழைத்து கௌரவப்படுத்தியதாகவும் தொடர்ந்து பலமுறை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றிற்கு எல்லாம் ஆதாரங்கள் என எதுவும் இல்லை.

1963 குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கலந்து கொண்டதாக எந்த ஆவணமும் அரசிடம் இல்லை என 2018ல் இந்திய அரசு பதில் அளித்து இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், இந்தியா சீன போரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என அர்ஜுன் சம்பத் மற்றும் வலதுசாரிகள் பரப்பும் புகைப்படத்தில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அல்ல, இந்திய இராணுவத்தினர். மேலும், இந்தியா சீனா போர் நடைபெற்றது 1963, 1965 அல்ல, 1962 என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button