This article is from Nov 16, 2017

2000 ரூபாய் நோட்டை அச்சடிப்பதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி.

பரவிய செய்தி

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி உள்ளது , மேலும் புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அடுத்த மாதம் வெளியிட உள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

சில்லறை தட்டுப்பாடை போக்க புதிய 200  ரூபாய் நோட்டுகள் வருகின்றன ….

விளக்கம்

 இந்தியாவில் சென்ற வருடம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டனர் . புதிய 2000  நோட்டுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் . சிறுவணிகத்தில் 2000 நோட்டுகளுக்கு சில்லறை எங்கும் இல்லாத நிலை ஏற்பட்டது .

அதன்பின் புதிய 500 நோட்டுகளை வெளியிட்டாலும் , சில்லறை தட்டுப்பாடு அணைத்து இடங்களிலும் இருக்கத்தான் செய்கின்றது . இதனால் புதிய 200 ரூபாய் நோட்டுகளை வெளியிட தீர்மானித்தனர் .எனவே 2000 நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திக்கொண்டு புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வருகின்றனர் ரிசர்வ் வங்கி . ஆகஸ்ட் மாதத்தில் புதிய நோட்டுகளை வெளியிட திட்டமிட்டனர் .

2016 ல் பணமதிப்பு குறைப்பால் பெறப்பட்ட பழைய 1000 ரூபாய் நோட்டுகள் 6.3 பில்லியன் , அவற்றை விட அதிகமாக 3.7 பில்லியன் அதாவது 7.4 லட்சம் கோடி மதிப்பிற்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக RBI தெரிவித்துள்ளது . புதிய 200 ரூபாய் நோட்டுகள்  அச்சடிக்கும் முதல் பகுதி ஜூன் மாதத்திலே ஆரம்பித்து விட்டார்கள் . எனவே நாட்டில் சில்லறை மாற்றத்திற்கு பிரச்சனைகள் ஏற்படாது என்று கூறியுள்ளனர் .

2000 நோட்டுகளை தடை செய்யப் போகிறார்கள் என்றெல்லாம் அச்சம் கொள்ள தேவை இல்லை . புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிக்காக நிறுத்தி உள்ளனர் . எனவே, தவறான செய்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம் மக்களே ..

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader