ஜனவரி முதல் 1000ரூ நோட்டுகள் அறிமுகம் & 2,000ரூ நோட்டுக்கு தடையா ?

பரவிய செய்தி

அவசர செய்தி!! ஜனவரி 1ம்தேதி அன்று முதல் ரூ 1000 த்தை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு ரூ 2000 த்தை திரும்ப பெற்று கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50000 ம் மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றி விடுங்கள் .10 ம்தேதிக்கு பின் மாற்ற இயலாது. FORWARDED NEWS , V.Senthilkumar Auditor Ph 9042444555 …

மதிப்பீடு

விளக்கம்

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளாக நிறைவடைய போகிறது. அன்று முதல் புதிய 50 , 100 , 200, 500, 2000 உள்ளிட்ட நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வந்தது.

Advertisement

இதற்கிடையில், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது , புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக் கொள்ள போகிறது என்ற வதந்திகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருப்பதை பார்க்க முடிகிறது.

தற்பொழுது, ” ஜனவரி 1-ம் தேதி முதல் 1000ரூ நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. அதை முன்னிட்டு ரூ 2000-த்தை திரும்ப பெற்று கொள்கிறது. தங்கள் வங்கி கணக்கில் ரூபாய் 50000 ம் மட்டுமே 10 தினங்களில் மாற்ற முடியும். ஆகவே தங்களிடம் உள்ள ரூ 2000 நோட்டுகளை இப்போது இருந்தே மாற்றி விடுங்கள் .10 ம்தேதிக்கு பின் மாற்ற இயலாது ” என்னும் தகவல் ஆடிட்டர் செந்தில்குமார் என்ற பெயர் மற்றும் செல்போன் என்னுடன் பரவி வருகிறது.

இதன் உண்மைத்தன்மை என்ன என்றும் பலரும் கேட்டு வருகிறார்கள். முகநூல் , வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இத்தகைய ஃபார்வர்டு செய்தியில் ஆடிட்டர் செந்தில்குமாரின் தொலைபேசி எண் என அளிக்கப்பட்டு இருக்கும் 9042444555 எண்ணிற்கு யூடர்ன் தரப்பில் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறோம் . ஆனால், ஸ்விட்ச் ஆஃப் என்றும், நீண்ட நேரம் போன் ரிங் ஆகியும் அழைப்பை எடுக்காமலும் உள்ளனர் .

Advertisement

அந்த எண்ணை வைத்து ஆடிட்டர் செந்தில்குமாரின் அலுவலக எண்ணை கண்டறிந்து , அதற்கும் தொடர்பு கொண்டோம். ஆனால், அழைப்பை எடுக்கவில்லை. ஆடிட்டர் தரப்பில் பதில் கிடைக்கவில்லை என்பதால் செய்திகளின் வாயிலாக தேடினோம், ஆனால் சமீபத்தில் அதுபோன்ற செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

2017 பிப்ரவரியில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு பதில் அளித்த ரிசர்வ் வங்கி அதிகாரி கூறுகையில், ” முதற்கட்ட திட்டமாக புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ஜனவரியில் அறிமுகப்படுத்துவதாக இருந்தோம் , ஆனால் 500 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்கும் தேவை இருந்ததால் தாமதம் ஆகியது ” என தெரிவித்து இருந்தனர் .

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் வெளியிடும் நோக்கத்தில் இருக்கின்றனர். ஆனால், எப்பொழுது வெளியாகும் என உறுதியாக தெரியவில்லை .

ரிசர்வ் வங்கி தரப்பில் , புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ஜனவரி முதல் வெளியிட்டு 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை “.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில் இருந்து , புதிய 1000 ரூபாய் நோட்டுகளை ஜனவரி முதல் வெளியிட்டு 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ள போவதாக வெளியாகும் தகவல் வதந்தியே . அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

அதில் அளிக்கப்பட்டு இருக்கும் ஆடிட்டர் தொலைபேசி எண் எதற்காக அளித்தார்கள் தெரியவில்லை. அதற்கு தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை. ரிசர்வ் வங்கி தரப்பில் 2,000 ரூபாய் நோட்டுகள் தடை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை.

மக்களை அச்சமடைய வைக்க வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது .

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button