இந்தியாவில் 21% குழந்தைகளுக்கு தீவிர ஊட்டச்சத்து குறைபாடு.

பரவிய செய்தி

சர்வதேச பட்டினிக் குறியீடு( global hunger index) 2018-ல் இந்தியா 103-வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள 21% குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டை கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மதிப்பீடு

சுருக்கம்

கடந்த ஆண்டை விட மூன்று இடங்கள் இறங்கி பட்டியலில் 103-வது இடத்தில் இந்தியா உள்ளது. பட்டினி நிலையில் இந்தியா அபாயகரமான (தீவிர) நிலை என்று வகைப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

விளக்கம்

2018 Global Hunger Index அறிக்கையில் நான்கு முக்கிய குறிக்காட்டிக்களை பயன்படுத்தி பட்டினி அளவை கணக்கிட்டு உள்ளனர். இவ்வாறான ஆய்வறிக்கையானது கூர்ந்து பரிசீலனை செய்து ஆண்டுதோறும் Cocern worldwide மற்றும் Welthungerlife ஆல் வெளியிடப்படுகிறது.

Advertisement

ஊட்டச்சத்து பற்றாக்குறை, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குறைந்த எடை, வயதிற்கு ஏற்ற உயரமின்மை, குழந்தைகள் இறப்பின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் மிகக்குறைந்த எடையில் உள்ளது தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டில் உள்ளனர் என்பதை பிரதிபலிக்கின்றது என்பதை 2018 Global Hunger Index-ம் மூலம் அறியலாம். சர்வதேச அளவில் தெற்கு சூடான் நாடு குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

119 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் இடம்பெற்றதோடு, பட்டினி நிலையில் இந்தியா அபாயகரம் என வகைப்படுத்தி உள்ளனர். சென்ற ஆண்டை விட இந்தியா மூன்று இடங்கள் கீழிறங்கி உள்ளது. இருப்பினும், ஆய்வு குறியீட்டில் முடிவுகள் துல்லியமாக ஆண்டுகளுக்கு இடையே ஒப்பிடப்பட்டவை அல்ல. 2018 மதிப்பெண்கள் 2013-2017 இடைப்பட்ட தரவுகளை பிரதிபலிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர ஊட்டச்சத்து குறைப்பாடு உடைய மக்கள் தொகை 2000-ல் 18.2 சதவீதத்தில் இருந்து 2018-ல் 14.8 சதவீதம் குறைந்துள்ளது, குழந்தைகளின் இறப்பு 9.2%-ல் இருந்து 4.2% ஆக குறைந்து உள்ளது என்றுள்ளனர்.

எனினும், ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டு நோய்த்தாக்கம் கொண்ட குழந்தைகள் எண்ணிக்கையை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் மோசம். 2000-ல் 17.1% ஆக இருந்த நிலை உயர்ந்து 2005-ல் 20 % ஆகியது. தற்போது 21% சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. எண்ணிக்கை குறையாமல் இருப்பதை தெளிவாக உணர வேண்டும். தெற்கு சூடான் 28% கொண்டுள்ளது.

உலகளவில் பட்டினி அளவு அபாய கட்டத்தை நோக்கி வீழ்கிறது. ஆய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு 2030-ல் 50 நாடுகள் குறைந்த பட்டினி வகைப்படுத்தலில் தோற்றுவிடுவர் என்கிறார்கள்.

Advertisement

பொருளாதார நிலையில் உயர்வதாகக் கூறப்படும் இந்தியாவில் பட்டினியால் வாடி ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தீவிரமடைகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button