2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
2019-ம் ஆண்டின் லோக்சபா தேர்தலுக்கான நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த தேதியில் நடக்கின்றன என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மதிப்பீடு
விளக்கம்
2019 லோக்சபா தேர்தலுக்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. தேசிய கட்சிகள் கூட்டணிகளை உருவாக்கியும், தேர்தல் பிரச்சாரங்களை முன் கூட்டியே தொடங்கிய நிலையில் ஒவ்வொரு மாநிலத்திற்குமான தேர்தல் நாளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததாக வாட்ஸ் ஆஃப் ஃபார்வர்டுகள் பரவி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கினாலும் தேர்தல் நாள் பற்றிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பிலும், அதிகாரப்பூர்வ பத்திரிகை தகவலும் வெளியிடவில்லை.
ஆக, 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் என பரவி வருபவை வதந்தியே !
இருப்பினும், பரவி வரும் ஃபார்வர்டு செய்தியில் இருக்கும் தேதிகள் ஆனது 2014 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட தேதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரவிய செய்தியில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி என உள்ளது. 2014-ல் ஏப்ரல் 24-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் என செய்தியில் வெளியாகி உள்ளது.
2014 ஆம் ஆண்டு தேர்தல் நாட்களை 2019 நாடாளுமன்ற தேர்தல் நாட்கள் என தவறாக பரப்பி வருகின்றனர். மார்ச் 10-ம் தேதி(இன்று) தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
2014 Lok Sabha elections: Statewise voting dates