திமுக கூட்டணி 201 தொகுதியில் வெற்றி பெறும் என அமெரிக்க நிறுவனம் கருத்துக்கணிப்பா ?

பரவிய செய்தி
“திமுக கூட்டணி 201 தொகுதிகளில் வெற்றி பெறும்!” – ‘Focus Groups’ என்ற அமெரிக்கா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவு!
மதிப்பீடு
விளக்கம்
2021-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. அதிமுக, திமுக ஆகிய பெரும் கட்சிகளின் கூட்டணி மட்டுமின்றி சிறு கட்சிகளும் களம் காணுகின்றனர். மேலும், ரஜினி, கமல் ஆகிய இருவரின் கட்சியும் தேர்தலில் போட்டியிட உள்ளதால் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி பெரும்பான்மையுடன் யார் வெற்றி பெறுவார் என கணிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.
தேர்தலுக்கு சில மாதங்கள் இருப்பதால் கருத்து கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று. அமெரிக்காவைச் சேர்ந்த Focus Group எனும் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 201 தொகுதியில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என வெளியானதாக திமுக ஆதரவாளர்களால் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
201 போதாது 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றிபெற வேண்டும்.👏🖤❤️💪🌅🖐️🔥💐🙏@mkstalin @Udhaystalin @DmkLoyola @TrendsDmk @DmkTrendsoff @Dmktrends @dmk_trends @arivalayam @DMKITwing @DMK4TN @DMKTiruval @DMK_Kaaran @DrSenthil_MDRD @YouthWingArmy @ThamizhachiTh @Anbil_Mahesh pic.twitter.com/PhNGziOrL2
— திருத்தணி க.விக்னேஷ்வரன் தி.மு.க (@VigneshwaranDMK) December 3, 2020
“திமுக கூட்டணி 201 தொகுதிகளில் வெற்றி பெறும்!”
– ‘Focus Groups’ என்ற அமெரிக்கா நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவு!🙏
— Ananthi (@Ananthi06635649) December 2, 2020
” Focus Group of Cleveland ” எனும் நிறுவனம் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகிறது என்கிற தகவலை அந்நிறுவனத்தின் விவரங்களின் இருந்து அறிய முடிந்தது. ஆனால், தமிழக தேர்தல் தொடர்பாக அப்படி எந்தவொரு கருத்துக் கணிப்பையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.
Focus Group of Cleveland நிறுவன இணையதளத்தின் முகப்பில் இருக்கும் புகைப்படத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கருத்துக் கணிப்பு நடத்தியதாக மீம்ஸ் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். கட்சி ஆதரவாளர்களும் 2021 தேர்தலில் திமுக கூட்டணி 201 தொகுதியில் வெற்றி பெறும் என அமெரிக்க நிறுவனத்தின் பெயருடன் வதந்தியைப் பகிர்ந்து வருகிறார்கள்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.