2021 கும்பமேளாவிற்கு ஹரித்வாரில் கூடிய பக்தர்களின் கூட்டமா ?

பரவிய செய்தி

ஹரிதுவார் கும்பமேளா ..

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருகையில் நாடு முழுவதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்ட கூட்டம் என இவ்விரு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?

முதல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜனவரி 22-ம் தேதி ” Kumbh Mela: Lost and found at the world’s biggest gathering ” எனும் தலைப்பில் வெளியான பிபிசி கட்டுரையில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

இரண்டாவது புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2019 ஜனவரி 16-ம் தேதி ” Seers, Naga sadhus of various akharas proceed in royal splendour for Kumbh’s first shahi snan ” எனும் தலைப்பில் வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Advertisement

கும்பமேளா எனத் தேடினால் இப்புகைப்படங்கள் முதன்மையாக கிடைப்பதால் இவ்விரு புகைப்படங்களும் தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ஹரித்வார் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறித்து செய்திகள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

முடிவு : 

நம் தேடலில், 2021 ஹரித்வார் கும்பமேளாவில் கூடிய கூட்டம் எனப் பரப்பப்படும் இவ்விரு புகைப்படங்களுமே 2019-ம் ஆண்டு எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button