This article is from Sep 30, 2018

ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் அபராதம் செலுத்த தேவையில்லையா ?

பரவிய செய்தி

நீங்கள் வண்டி ஓட்டும் போது உங்களிடம் ஓட்டுநர் உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்கள் இல்லையென்றால் அபராதம் கட்ட தேவை இல்லை . சட்டப்படி உங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க பதினைந்து நாட்கள் அவகாசம் உள்ளது. ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு உங்கள் அபராத செலுத்துச் சீட்டு ரத்து செய்யப்படும்.

மதிப்பீடு

சுருக்கம்

வாகன சோதனையின் போது ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் அபராத தொகை விதிக்க போக்குவரத்துக்கு காவல்துறையினருக்கு அதிகாரம் உண்டு.  15 நாட்களுக்கு பிறகு ஆவணம் சமர்ப்பித்தால் செலுத்து சீட்டு ரத்தாகாது.

விளக்கம்

உங்களிடம் ஆவணங்கள் இல்லையென்றால் கூட உங்களிடம் அபராத செலுத்து சீட்டு அளிக்க முடியாது . 15 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பித்து விட்டால் செலுத்து சீட்டு ரத்தாகி உங்கள் அபராதத்தொகை ரத்தாகும் என்னும் செய்தி பரவலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்திய மத்திய அரசுச் சட்டம் , 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின் 130 வது பிரிவின் படி சீருடையிலிருக்கும் காவல் துறை அதிகாரி பரிசோதிக்கும் போது ஓட்டுநர் அவரது வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கடமை. மேலும் அவ்வாறு பரிசோதிக்கும் போது ஆவணங்களை காட்ட தவறும் பட்சத்தில் காவல் துறை அதிகாரிக்கு சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க உரிமை உள்ளது .

மத்திய மோட்டார் வாகன விதிகளின் 139-ஆவது பிரிவு , முந்தைய சட்ட திருத்தத்தின் படி , மோட்டார் வாகனத்தின் ஓட்டுநர் அல்லது நடத்துனர்  வண்டி பதிவு ஆவணம், காப்பீடு, உடற்தகுதி மற்றும் அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சீருடையிலுள்ள  போலீஸ் அதிகாரி அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேறு எந்த அதிகாரி கேட்கும் போது சமர்ப்பிக்க தவறினால் அந்த ஆவணங்களை 15 நாட்களுக்குள் ஏதாவது  போலீஸ் அதிகாரியிடம் உறுதிப்படுத்தி அந்த ஆவணங்களை கோரிய அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆவணங்கள் அனுப்பியதால் அபராதம் ரத்தாகாது. சமீபத்தில் தமிழக அரசு போக்குவரத்து துறை அபராதத்தொகையை பணமாக செலுத்த தேவை இல்லை என அறிவித்திருந்தது. அபாரதத்தை ஸ்விப் மெஷின்  மூலமாகவோ ஆன்லைன் மூலமாகவோ  செலுத்தலாம் அல்லது சீட்டினை பெற்று 48 மணி நேரத்துக்குள் அபராதத்தை செலுத்த வேண்டும் . தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

புரளியை நம்பாமல் உண்மையான ஆவணங்களை வண்டி ஓட்டும் போது எப்போதும் வைத்திருத்தல் நன்று.

Related Article:

ஸ்வைபிங் மிஷின் மூலம் அபராதம்: அறிமுகப்படுத்தியது சென்னை போலீஸ்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader