400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.

பரவிய செய்தி

இமயமலை திபெத்தில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் பகோடா மலர்.

மதிப்பீடு

விளக்கம்

அழகிய தோற்றங்களில் மட்டுமல்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் மலர்கள் எப்பொழுதும் ரசிக்கக்கூடியவையே. அப்படியான தோற்றத்தில் இருக்கும் மலர்கள் இணையத்தில் பகிரப்படுவது எதார்த்தம் . ஆனால், வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் பூக்கள், பழங்களை வைத்து தவறான தகவல்களை பரப்புவது நின்றபாடில்லை.

Advertisement

Facebook post archived link 

இமயமலையில் திபெத்திய பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முறை மட்டுமே மலரக் கூடிய பகோடா மலர் என வான்நோக்கி கூர்மையாக வளர்ந்து இருக்கும் ஓர் மலரின் புகைப்படத்தை நாட்டு மருந்து சித்த மருத்துவம் என்ற முகநூல் குழுவில் சோலார் என்ற முகநூல் கணக்கு மூலம் பகிரப்பட்டு இருந்தது.

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் அதிசய மலர் என பகிரப்பட்டு வரும் மலரின் விவரங்கள் குறித்து ஆராய்ந்து பார்த்தோம். மலரின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்து தேடி பார்க்கையில் pinterest என்ற தளத்தில் Flora and Fauna-bhutan எனும் தலைப்பில் மேற்காணும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

Advertisement

மலர் குறித்து மேற்கொண்டு தகவல்களை தேடிய பொழுது, Rheum nobile என்ற தாவரவியல் பெயரில் இதே மலர்கள் ebay தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. Rheum nobile என்பது இமயமலை பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட மிகப்பெரிய அளவில் வளரும் தாவரமாகும். இந்த தாவரமானது வடகிழக்கு ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , நேபாளம், இந்தியாவில் சிக்கிம் , பூட்டான், திபெத்தில் இருந்து மியான்மர் வரையிலான மண்டலத்தில் 4000-4800மீ உயரத்தில் காணப்படுகிறது.

1 முதல் 2 மீ உயரம் வரை வளரக்கூடிய Rheum nobile என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட Sikkim rhubarb அல்லது Noble rhubarb தாவரம் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதில்லை. ஜூன்-ஜூலை மாதங்களில் பூக்களை பூப்பதாக flowersofindia என்ற இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளனர்.

100 வருடங்களுக்கு ஒருமுறை அல்லது 400 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மலர்கள் என தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது முதல்முறை அல்ல.

mahameru facebook post archived link 

கடந்த ஆண்டில் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மஹாமேரு புஸ்பம் என சில பூக்களின் புகைப்படங்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.

மஹாமேரு புஷ்பம் என பகிரப்பட்ட புகைப்படங்களில் இருப்பது ஆர்க்கிட் வகை செடியின் மலர்கள் மற்றும் காசி தும்பை வகையை சேர்ந்த மலர்களை போன்று உள்ளன. அவற்றில் கூடுதலாக கிராபிக்ஸ் செய்தும் உள்ளனர். மஹாமேரு புஷ்பம் என்ற வகை மலர்களே இல்லை. அதேபோல், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளும் இல்லை.

மேலும் படிக்க : இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதானப் பூக்களா ?

இதேபோன்று 2017-ல் இமயமலையில் பெண் வடிவில் பூக்கும் அரிதான நாரிதலா பூக்கள் என மோல்டிங் செய்யப்பட்ட பழங்களை வைரலாக்கிய சம்பவமும் அரங்கேறி உள்ளது. இப்படி கிடைக்கும் பூக்கள், பழங்களின் புகைப்படங்களை எல்லாம் வைத்து 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்கள் என தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

நம்முடைய தேடலில் இருந்து, 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலர் என பரப்பி வரும் புகைப்படத்தில் இருப்பது இமயமலை பகுதிகளில் காணப்படும் Rheum nobile என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தாவரமாகும். 400 அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகள் என்று எந்தவொரு செடிகளும் இல்லை என்பதே உண்மை.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close