4ஜி செல்போன்கள் உற்பத்தியை அரசு நிறுத்தச் சொல்லியதாக தவறானச் செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி

4ஜி செல்போன்களை உற்பத்தியை உடனடியாக நிறுத்த வேண்டும் –  மத்திய அரசு

4g cellphone stop

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் 5ஜி சேவையினை வழங்கி வருகின்றன.

Archive twitter link

Archive twitter link

Video link

இந்நிலையில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியினை நிறுத்த ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளதாகத் தினத்தந்தி, சத்தியம், குமுதம் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

உண்மை என்ன ?

கடந்த செப்டம்பர் மாதம், 1ம் தேதி இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையினை வழங்கி வருகின்றன.

Archive news link

இந்நிலையில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியினை நிறுத்த ஒன்றிய அரசு செல்போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது எனத் தினத்தந்தி  அக்டோபர் 13ம் தேதி செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அச்செய்தியில் இந்த அறிவிப்பு எந்த அமைச்சகம் வெளியிட்டது எனக் குறிப்பிடப்படவில்லை. 

Archive news link

இதனைத் தொடர்ந்து குமுதம் இணையதளம் அக்டோபர் 14ம் தேதி இச்செய்தியினை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியினை நிறுத்த வேண்டும் எனவும், முற்றிலும் 5ஜி செல்போன் விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் செல்போன் நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ரூ.10 ஆயிரத்துக்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியினை நிறுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என  சத்தியம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து அரசின் அதிகாரப்பூர்வமான பக்கங்களில் தேடினோம். அதில், 4ஜி செல்போன்களின் உற்பத்தியை நிறுத்துவது குறித்து இந்திய தகவல் தொடர்பு அமைச்சகமோ, TRAI அமைப்போ எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. 

Archive twitter link

மேலும் இந்த செய்தி குறித்து அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கமான PIB Fact Check அக்டோபர் 13ம் தேதி ஒரு டிவீட் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “3ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதை நிறுத்துமாறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவறான செய்தி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive twitter link | Archive news link

இதனைத் தொடர்ந்து தினத்தந்தி அக்டோபர் 14ம் தேதி “3ஜி மற்றும் 4ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது” எனச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தவறாக வெளியிட்ட செய்தியைத் தினத்தந்தி வலைப்பக்கம் நீக்கவில்லை.

முடிவு :

நம் தேடலில், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் விலையுள்ள 4ஜி செல்போன்களின் உற்பத்தியினை நிறுத்த ஒன்றிய அரசு செல்போன் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




Back to top button
loader