பழைய 5,10 & 100ரூ நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததா ?

பரவிய செய்தி

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு. ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பீடு

விளக்கம்

2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு பலமுறை மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வதந்திகள் வைரலாகி இருக்கின்றன.

Advertisement

இந்நிலையில், பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக முன்னணி நாளிதழ் செய்திகளிலும் வெளியாகி வருகிறது. ஆனால், மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்க உள்ளதாக பரவும் தகவல் உண்மை அல்ல என்று ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

Twitter link | Archive link 

ஜனவரி 25-ம் தேதி ரிசர்வ் வங்கி, ” வருங்காலத்தில் பழைய ₹ 100, ₹ 10 & ₹ 5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக சில ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள் தவறானவை என தெளிவுப்படுத்தப்படுகிறது ” என தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.

Advertisement

மேலும் படிக்க : மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாதா ?| இந்தியன் வங்கி அறிவிப்பால் குழப்பம்.

இதற்கு முன்பாக, பலமுறை புதிய 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், 50, 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப் போவதாகவும் வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன.

மேலும் படிக்க : பழைய 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாதா ?

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button