பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் அகற்றப்பட்டது| அச்சுறுத்தும் பிளாஸ்டிக் !

பரவிய செய்தி

பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் குப்பை அகற்றம். திருமுல்லைவாயிலை சேர்ந்த முனி ரத்தினம் என்பவரின் பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது. பசு தனது கழிவை வெளியேற்ற முடியாமலும், சிறுநீர் கழிப்பதிலும் சிரமப்பட்டு வந்துள்ளது. எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் முதல் இரைப்பை 75% பிளாஸ்டிக்கால் நிரம்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மதிப்பீடு

விளக்கம்

கடல்வாழ் உயிரினங்கள், நிலப்பகுதியில் வாழும் உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக சேர்வதை பலரும் அறிந்து இருக்கக்கூடியதே. இதைத் தடுக்கவும் முடியாமல் பல உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன.

Advertisement

குறிப்பாக , ஆடு மற்றும் மாடுகள் மேயும் பொழுது குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்தே உண்ணுகின்றன என்பதை பல காலமாகவே பேசி வருகிறோம். இதனால் கால்நடை உயிரினங்களுக்கு பாதிப்புகள் அதிகம் நேர்கின்றன.

இந்நிலையில் , தமிழகத்தில் பசு மாட்டின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை மருத்துவர்கள் அகற்றி உள்ளதாக செய்தி ஒன்றை ஃபாலோயர் ஒருவர் அனுப்பி , அதன் விவரங்களை கேட்டிருந்தார். இதையடுத்து , மாட்டின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகளை மருத்துவர்கள் அகற்றிய செய்திகள் குறித்து தேடினோம் .

சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கு சொந்தமான பசுவானது சாணம் மற்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனால் உரிமையாளர் அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் . அவர்கள் சென்னை வேப்பேரிக்கு (Vepery) அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அங்கு பசுவை ஸ்கேன் செய்து பார்த்த பொழுது வயிற்றில் கழிவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்ததில் பசுவின் இரைப்பையில் 75% பிளாஸ்டிக்கால் நிரம்பியுள்ளதை மருத்துவர்கள் அறிந்தனர். அக்டோபர் 18-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை மாலை 4.30 மணிக்கு முடிவடைந்தது . 6 வயதான பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள், ஆணிகள், ஊசிகள் , அலுமினியம் தகடுகள், நாணயங்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

Advertisement

பசுவின் வயிற்றில் இருந்து 52 கிலோ பிளாஸ்டிக் கழிவை வெற்றிக்கரமாக அகற்றிய மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். மேலும், பிளாஸ்டிக் பயன்பட்டால் மண்ணிற்கு மட்டுமின்றி , வாய்ப்பேச முடியாத உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க : இறந்த பெண் திமிங்கலத்தின் வயிற்றில் 20 கிலோ பிளாஸ்டிக் !

பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்களின் உயிரிழப்பு குறித்து பல செய்திகளை படித்து இருப்போம். இதற்கு முன்பாக இத்தாலி நாட்டில் இறந்த பெண் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 20 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் எடுக்கப்பட்டது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குப்பைகளில் இருந்து உணவுகளை தேடும் கால்நடைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் அவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுள் அதிகம் ஆக்கிரமித்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இனி வரும் காலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதற்கு இவையே உதாரணமாகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button