6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரமா ?| உலகின் பழமையான மரம் எது ?

பரவிய செய்தி

ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள 6000 ஆண்டுகள் பழமையான பாவோபாப் மரம்.

மதிப்பீடு

விளக்கம்

யிரக்கணக்கான ஆண்டுகள் வாழக் கூடிய மரங்கள் மட்டுமே பூமியின் நிரந்தர குடிமக்கள் போன்றவை. உலக அளவில் பழமையான மரங்களை குறித்து கேட்பவருக்கு அது ஆச்சரியம் கொள்ள வைக்கும். இயல்பாகவே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மரங்கள் அரிதானவையாக பார்க்கப்படுகிறது.

சமூக வலைதள பதிவுகள் :

Advertisement

அவற்றில் ஒன்றாக 6,000 ஆண்டுகள் பழமையான மரம் ஆப்பிரிக்கா நாட்டில் இருப்பதாக சமூக வலைதளங்கள் மட்டுமின்றி இணையதளங்களில் அதிகம் பார்த்து இருப்பீர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள பாவோபாய் மரமானது 6,000 ஆண்டுகள் பழமையானது என்ற பதிவானது A Solo Traveler என்ற முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதி பதிவிடப்பட்டது.

அந்த புகைப்பட பதிவானது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள், 800-கும் மேற்பட்ட ஷேர்களை பெற்றிருக்கிறது. அந்த பதிவின் கமெண்டில் ஒருவர் Amazing Stories என்ற பக்கத்தில் 7,500 ஆண்டுகள் பழமையான பாவோபாய் மரங்கள் என பதிவானதை காண்பித்து யார் சொல்வதை நம்புவது எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

6,000 ஆண்டுகள் வயது கொண்ட பாவோபாய் மரம் எனும் வைரலாகும் புகைப்படங்களை உலக அளவில் பலரும் பார்த்திருக்கக்கூடும். ஆகையால், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய முற்பட்டோம்.

Advertisement

உண்மை என்ன ?

6,000 ஆண்டுகள் பழமையான பாவோபாய் மரம் குறித்த தேடலில் ஒரு சில இணையதள பதிவுகளையும், வீடியோவையும் காண முடிந்தது. அதில், The Fringe என்ற இணையதளத்தில் வெளியான கட்டுரையில், ” பாவோபாய் மரங்கள் 6000 ஆண்டுகள் பழமையான மரங்கள் என கார்பன் சோதனை மூலம் கண்டறியப்பட்டது என குறிப்பிட்டு இருக்கின்றனர்”. அந்த கட்டுரையில் சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம் இடம்பெற்று உள்ளது.

எனினும், படத்தில் காண்பிக்கப்பட்ட படம் தான் 6,000 ஆண்டுகள் பழமையானவை என்றோ, கார்பன் சோதனை குறித்தோ எந்தவொரு விவரமும் இணைக்கப்படவில்லை. மாறாக, africablog என்ற வலைப்பதிவின் லிங்கே இடம்பெற்று இருக்கிறது.

சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதையடுத்து மீண்டும் தேடிய பொழுது, science.howstuffworks என்ற இணையதளத்தில் வெளியான கட்டுரையை காண முடிந்தது. அதில், தோராயமாக பாவோபாய் மரங்கள் தொடர்ச்சியாக 1,500-2000 ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆனால், 2018 ஜூனில் வெளியான Nature plants பத்திரிகையில் பழமையான பாவோபாய் மரங்கள் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி குழு தெரிவித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாவோபாய் மரங்கள் :

ஆப்பிரிக்காவிற்கு மரங்களின் சிறப்பு என்றால் பாவோபாய் எனக் குறிப்பிடலாம். குறிப்பாக,
செனெகல் என்ற நாட்டில் அதிக அளவில் பாவோபாய் மரங்களை காணலாம். பாவோபாய் பார்ப்பதற்கு வித்தியாசமான தோற்றம் கொண்டவை. மரங்கள் குண்டாகவும், கிளைகள் சிறிதாகவும் காட்சியளிக்கும். பாவோபாய் மரங்களில் மொத்தம் 9 இனங்கள் உள்ளன.

பாவோபாய் மரங்கள் அமெரிக்காவின் மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியா, இலங்கையிலும் ஒரு சில இடங்களில் அரிதாய் காண முடியும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடிய பாவோபாய் மரங்கள் 5 மீட்டர் முதல் 30 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை எனக் கூறுகின்றனர்.

உலகின் பழமையான மரம் எது ?

உலகில் உள்ள பழமையான மரம் எது என்பது குறித்து தேடிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த bristlecone pines பற்றி அறிய முடிந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா ஒய்ட் மௌவுண்டேயின் பகுதியில் உள்ள bristlecone pines மரமானது 4,800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம் எனக் குறிப்பிட்டு உள்ளனர். இதனை 1957-ம் ஆண்டு டாக்டர்.எட்மண்ட் ஸ்சுல்மன் என்பவர் கண்டுபிடித்தார்.

முடிவு :

நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, பாவோபாய் மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மரம் என்றாலும் 6,000 ஆண்டுகள் பழமையான மரம் எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. அவ்வாறு பதிவிடும் இணையதளங்களில் ஆதாரங்கள் இல்லாமல் எழுதி உள்ளனர்.

உலகின் பழமையான மரமாக bristlecone pines கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. அதன் வயது 4,800 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

பாவோபாய் மரங்கள் பழமையான மரங்கள் என்றாலும் 6,000 ஆண்டுகள் எனக் கூறுவது தவறான தகவல். மக்கள் அதனை நம்பி தவறான தகவலை பகிர வேண்டாம்.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close