வன்புணர்வு செய்யப்பட்ட 9 மாதக் குழந்தை என பரவும் தவறான புகைப்படங்கள் !

பரவிய செய்தி

தெலங்கானாவில் வன்புணர்வு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட 9 மாதக் குழந்தை சிகிச்சை பெறும் காட்சி டிக்டாக்-ல் பரவி வருகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

தெலுங்கானாவின் ஹன்மகொண்டா பகுதியில் 9 மாதக் குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மற்றொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

விளக்கம்

சில தினங்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் 9 மாதக் குழந்தையை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக ஓர் குழந்தையின் வீடியோ டிக்டாக் உள்ளிட்டவையில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

என்ன நடந்தது ?

தெலங்கானா மாநிலத்தில் ஹன்மகொண்டா பகுதியின் குமரப்பள்ளியில் வசித்து வந்த குடும்பத்தினர் இரவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. ஆகையால், மாடியின் வழியாக உள்ளே நுழைந்த இளைஞர் தாயின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாதக் குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுள்ளான்.

நள்ளிரவு 1.45 மணியளவில் குழந்தையை காணவில்லை என குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து தேடத் துவங்கினர். உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகு குடும்பத்தினர், காவல்துறை, உள்ளூர் வாசிகள் என அனைவரும் குழந்தையை தேடி அலைந்தனர். அப்போழுது, ஒரு இளைஞன் குழந்தையை துணியில் சுற்றி எடுத்துச் செல்வதை குழந்தையின் உறவினர் கண்டு கேள்வி எழுப்பிய போது, குழந்தையை போட்டுவிட்டு ஓடத் துவங்கி உள்ளான்.

ஆனால், அப்பகுதி மக்கள் இளைஞனை பிடித்து அடித்து உள்ளனர். அதன் பின்னர் அந்த இளைஞனை காவல்துறையிடம் ஒப்படைத்து இருந்தனர்.

குழந்தைக்கு என்ன ஆனது ?

Advertisement

குழந்தையை மீட்ட பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பலனில்லை. குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். போலீஸ் விசாரணையில், பிரவீன் எனும் இளைஞன் குழந்தையை கடத்தி வன்புணர்வு செய்துள்ளான் என்றும், குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்து இருந்தனர். அந்த இளைஞன் குடிப்போதையில் இருந்ததாகவும் கூறுகின்றனர்.

வாரங்கல் பகுதியில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் குழந்தையின் பிரேதப் பரிசோதனை முடிவிற்காக காவல்துறை காத்திருப்பதாக ஜூன் 19-ம் தேதி வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளியை கைது செய்த காவல்துறை திருட்டு, கொலை, குழந்தை கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மற்றொரு சம்பவம் :

ஹன்மகொண்டா சம்பவத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் 9 வயது சிறுமியை ஒருவர் கட்டிடப்பணிகள் நடக்கும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதற்கு காரணமானவரை காவல்துறை கைது செய்து உள்ளனர்.

முடிவு :

9 மாதக் குழந்தை கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட குழந்தை என மற்றொரு குழந்தை சிகிச்சை பெறும் வீடியோ வைரலாகி வருகிறது. அதனை வைத்து டிக்டாக் போன்றவையும் செய்து வருகின்றனர்.

9 வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தையும், ஏதோ ஒரு குழந்தை சிகிச்சை பெறும் படத்தையும் இனைத்து 9 மாதக் குழந்தை வன்புணர்வு சம்பவத்தோடு தொடர்புப்படுத்தி தவறாக பகிர்ந்து வருகின்றனர்.

பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பாதிக்கப்படும் குழந்தைகள், பெண்களின் புகைப்படங்கள் பல சம்பவங்களில் வெளியாவதில்லை. அதனை பதிவிடுவதும் தவறாகும். ஆனால், சில சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் என தவறான புகைப்படங்களே பகிரப்பட்டு வருகின்றன.

 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button