ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்துமஸிற்கு மட்டும் வாழ்த்து கூறுவதாக வதந்தி !

பரவிய செய்தி

இன்றைய ஆவின் பாலில் வந்த கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். அரசாங்கமே மறைமுக மதப் பிரச்சாரத்தை செய்கிறதா?இதுபோன்று தீபாவளிக்கு ஏன் ஆவின்பாலில் வாழ்த்து வரவில்லை. இதுதான் மதச்சார்பற்ற அரசு புரிந்து கொள்ளுங்கள்??

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

2021ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை தமிழ்நாடு அரசு விற்பனை செய்த ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவே தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறி வெளியிட்டார்களா என சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

2021 கிறிஸ்துமஸ் தினத்திற்கு வாழ்த்துக் கூறி ஆவின் வெளியிட்ட பால் பாக்கெட்கள் செய்திகளிலும் கூட வெளியாகி இருக்கின்றன. ஆனால், கிறிஸ்துமஸ் தினத்திற்கு மட்டும் வாழ்த்துக் கூறி இருப்பதாக அல்லது திமுக ஆட்சியில் இப்படி நிகழ்வதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை.

Twitter link 

கடந்த ஆண்டிலும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு, ரம்ஜான், தீபாவளி , புத்தாண்டு மற்றும் பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையின் போதும் வாழ்த்து அச்சிடப்பட்ட ஆவின் பால் பாக்கெட்களை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த நவம்பர் 4-ம் தேதி தீபாவளி தினத்தன்று கூட ” தீபங்களின் ஒளி இல்லத்தில் பரவட்டும் ” என பச்சை, நீலம், ஆரஞ்சு என அனைத்து நிற பாக்கெட் கவர்களிலும் வாழ்த்து அச்சிடப்பட்டு இருந்துள்ளது.

முடிவு :

நம் தேடலில், ஆவின் பால் பாக்கெட்களில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் மட்டுமே கூறப்பட்டு உள்ளதாகவும், தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூறி வெளியிடுவதில்லை எனப் பரவும் தகவல் தவறானது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறி பால் பாக்கெட்களை ஆவின் வெளியிட்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button