ஆவின் மூலம் கோமியத்தை விற்பனை செய்யுமாறு அர்ஜுன் சம்பத் கூறினாரா ?

பரவிய செய்தி

தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் தயிர் நெய் விற்பனை செய்வது போல கோமியத்தையும் விற்பனை செய்ய வேண்டும் – அர்ஜுன் சம்பத் வேண்டுகோள்.

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

ஜனவரி 19-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆவின் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட பிரீமியம் மில்க் கேக், யோகர்ட், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒய்ட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், ஆவின் நிறுவனம் மூலம் பால் தயிர் நெய் விற்பனை செய்வது போல் கோமியத்தையும் விற்பனை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கதிர் நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து கதிர் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அர்ஜுன் சம்பத் குறித்து அவ்வாறாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை.

அதேபோல், வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை, பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என கதிர் நியூஸ் மறுத்து பதிவிட்டு இருக்கிறது. அதை இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் பகிர்ந்து இருக்கிறது.

Twitter link 

மேலும் படிக்க : குழந்தைகளின் ரியாலிட்டி ஷோ விவகாரத்தில் அண்ணாமலை பற்றிப் பரவும் போலிச் செய்திகள் !

இதற்கு முன்பாக, பாஜக தலைவர் அண்ணாமலை குழந்தைகள் ரியாலிட்டி ஷோ தொடர்பாக ஊடகங்களை மிரட்டியதாக கதிர் நியூஸ் பெயரில் போலியான நியூஸ் கார்டுகள் பரப்பப்பட்டன. அதுகுறித்தும் நாம் பதிவிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் தயிர் நெய் விற்பனை செய்வது போல கோமியத்தையும் விற்பனை செய்ய வேண்டும் என அர்ஜுன் சம்பத் வேண்டுகோள் விடுத்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader