அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்து மோடியை புகழ்ந்தாரா?

பரவிய செய்தி
அபிநந்தன் தன்னிலை விளக்கம்
மதிப்பீடு
சுருக்கம்
அபிநந்தன் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
விளக்கம்
சில நாட்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய போது இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். அபிநந்தனின் வீடியோக்களும் செய்திகளும் ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியது. சமூகவலைத்தளங்களில் அபிநந்தனுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து வந்த அதே நேரத்தில் அவரை பற்றிய புரளிகளும் தவறான தகவல்களும் பகிரப்படுகின்றன.
அதில் அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக ஒரு பதிவு பாகிஸ்தானில் அவர் சிகிச்சை பெறும்போது எடுத்த புகைப்படத்துடன் வெளியாகிறது .
அபிநந்தன் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அபிநந்தன் இந்திய வந்த பொழுது “மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி” என தெரிவித்தார். அதன் பிறகு அவர் எதுவும் கூறவில்லை. அவர் கூறியதாக போலியாக பரவி வருகிறது.