இந்தியன் ஒருவர் கண்டுப்பிடித்த ஏசி பைக்கா ?

பரவிய செய்தி
கேரளாவை சேர்ந்த ஓர் இளைஞன் ஏசி பைக்கை கண்டுப்பிடித்துள்ளார் . இதுவே வெளிநாட்டு மாணவனாக இருந்தால் அனைவரும் கண்டுக் கொண்டிருப்பர்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய இளைஞன் கண்டுபிடித்ததாக கூறி சமூகவளைதலங்களில் பரவிய இந்த படத்தில் உள்ள பைக் ஐரோப்பாவை சேர்ந்த carver technology என்ற நிறுவனத்தால் தயாரித்தது . இந்நிறுவனத்தின் நிறுவனரின் கனவான dynamic vehicle control என்ற தானியங்கியாக சமநிலைக்கு வரக்கூடிய இயந்திரநுட்பம் கொண்ட மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்குவது .
இந்த வாகனத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று சக்கரங்களுடன் கார் மற்றும் பைக்யின் கலவையாக உள்ளது . மேலும் சுயமாக தனக்கு ஏற்றது போல் சமநிலைக்கு மாற்றும் வகையில் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது .
2006 ஆம் ஆண்டு carver நிறுவனம் இந்த வாகனத்தை உருவாக்கினார்கள் . மேலும் 200 க்கும் அதிகமான இந்த ரக வாகனத்தை தயாரித்து விற்பனை செய்தார்கள் . மீண்டும் 2009ஆண்டு அதில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்கள் .
இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பை இந்தியன் கண்டுப்பிடித்தான் என்று பொருந்தாத செய்தியை பரப்பி வருகின்றனர் . வெளிநாட்டில் யாராவது ஒரு பைக் , கார் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் அதை பயன்படுத்தி தவறான வதந்திகளை பரப்புவதே சிலர்க்கு வேலையாக போய்விட்டது .
பொய்யான பெருமைகள் நமக்கு எதற்கு , உன்மையில் நம் இளைஞர்களின் கண்டுப்பிடிப்புகளுக்கு தக்க மரியாதை கிடைப்பதில்லை . முடிந்தால் தங்களை சுற்றி உள்ளவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவுங்கள் .