நடிகர் அஜித் குமார் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி

Indiaல ban பண்ண E-Cigeratte அ உபயோகபடுத்தி இளைஞர்கள கெடுக்குரான் அத பொது மக்கள்லாம் வேடிக்க பாக்குரீங்க என் கடமை எம்.ஜீ.ஆர்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை நடிகர் அஜித் குமார் பயன்படுத்தியுள்ளார் எனவும், இளைஞர்களைத் தவறான வழியில் கொண்டு செல்வதாகவும் சமூக வலைத்தளங்களில் அஜித் குமாரின் புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

நடிகர் அஜித் மிகத் தீவிரமான பைக் பிரியர். அவர் படங்களிலும் பைக் சம்மந்தமான காட்சிகள் அதிகமாக இருப்பதை நம்மால் காண முடியும். நடிகர் அஜித் தற்பொழுது லடாக் வரையிலும் பைக் ட்ரிப் சென்றுள்ளார். அஜித் லடாக் ட்ரிப்பின் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் நடிகர் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை அஜித் பயன்படுத்தியுள்ளார் என ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இதுகுறித்து இணையத்தில் தேடியபொழுது பைக் ரைடர்ஸ் ஹைட்ரேஷன் பேக்(Hydration Backpack) என ஒன்றை பயன்படுத்துவது நமக்குத் தெரிய வந்தது. நீண்ட தூரம் பைக்கில் பயணம் செல்லும் பொழுது எளிதில் தண்ணீர் அருந்தும் விதமாக அந்தப் பேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பையில் இருந்து ஸ்ட்ராவ் வடிவில் ஒரு ட்யூபை பயன்படுத்தித் தண்ணீர் அருந்துவர்.

Backpack Link

நீண்ட தூரம் பைக் பயணம் செய்யும் நடிகர் அஜித் இந்த ஹைட்ரேஷன் பையை பயன்படுத்தியுள்ளார் என நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அது தொடர்பான புகைப்படத்தை கீழே காணலாம்.

மேலும், இ-சிகரெட்டு குறித்து இணையத்தில் தேடியபொழுது அதன் வடிவம் நீளமாக இருப்பதை நம்மால் காண முடிந்தது. வைரலான புகைப்படத்தில் அஜித் பயன்படுத்தியுள்ளது ஸ்ட்ராவ் வடிவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதிலிருந்து நடிகர் அஜித் பயன்படுத்தி இருப்பது பைக் பயணம் செய்பவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் ஹைட்ரஷன் பேக் என நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் படிக்க: விஜயின் வாரிசு பட ஃபர்ஸ்ட் லுக் ஓட்டோ விளம்பர போஸ்டரை காப்பி அடித்ததாக வதந்தி !

இதற்கு முன்பாக, நடிகர் விஜயின் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓட்டோ விளம்பர போஸ்டரை காப்பி அடித்ததாக வதந்தி பரப்பி இருந்தனர்.

மேலும் படிக்க : பிரபலங்களின் மீதான அதீத கொண்டாட்டம், அதீத வசை.. ரசிகர்கள் சிந்திக்க வேண்டும் !

பிரபலங்களின் மீதான அதீத கொண்டாட்டம் காரணமாக ஒரு பிரபலத்தின் மீது மற்றொரு பிரபலத்தின் ரசிகர்கள் வசை, பொய்யான தகவலை பரப்புவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது வேதனை அளிக்கக்கூடிய செயல்.

முடிவு :

நம் தேடலில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை நடிகர் அஜித் பயன்படுத்தியுள்ளார் எனப் பரப்பப்படும் தகவல் பொய்யானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader